தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக தரை வீடு $1.268 மில்லியனுக்கு விற்பனை

1 mins read
33909288-d06e-493b-8e65-90d2876fd99a
49 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட புளோக் 39 ஜாலான் பஹாகியா இரு மாடி தரை வீடு $1.268 மில்லியன் வெள்ளிக்கு விற்கப் பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வாம்போ வட்­டா­ரத்­தில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத் தரை வீடு $1.268 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வீடு 49 ஆண்­டு­க­ளுக்கு முன்பு கட்­டப்­பட்­டது.

இதுவே ஆக அதி­க­மான விலைக்கு விற்­கப்­பட்­டுள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடா­கும்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில் 'தி பினக்­கல்@டக்ஸ்­ட­னில்' உள்ள ஐந்து அறை வீடு ஒன்று $1.259 மில்­லி­ய­னுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.

இவ்­வாண்­டில் இதற்கு முன் இல்­லாத அள­வுக்கு அதிக வீவக வீடு­கள் ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மாக விற்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தி­னம் நில­வ­ரப்­படி இவ்­வாண்­டில் இது­வரை குறைந்­தது ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்கு 99 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மறு­விற்­பனை வீடு­கள் விற்­கப்­பட்­டுள்­ளன.

இவற்­றில் 12 வீடு­கள் இம்­மா­தம் விற்­பனை செய்­யப்­பட்­டன.

2012ஆம் ஆண்­டில் முதல்­

மு­றை­யாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மறு­விற்­பனை வீடு ஒன்று குறைந்­தது ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்கு விற்­கப்­பட்­டது.

இது­வரை மொத்­தம் 401 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள் குறைந்­தது ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்கு விற்­கப்­பட்­டுள்­ளன என்பது குறிப்பிடத்தக்கது.