செய்திக்கொத்து

ரஷ்யாவிலிருந்து திரும்பிய சிங்கப்பூரருக்கு கொரோனா

அண்மையில் திருமணம் செய்துகொண்ட சிங்கப்பூரருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் தமது கணவரையும் மாமனார், மாமியாரையும் பார்த்துவிட்டு சிங்கப்பூர் திரும்பிய அந்த 33 வயது பெண்ணுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்கு மூன்று வார பயணம் மேற்கொண்டதாக அறியப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் இம்மாதம் 11ஆம் தேதியன்று சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. பிறகு அவர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். ஹோட்டலில் இருந்தவாறு அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துகொண்டார்.

இந்நிலையில், அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ரஷ்யாவில் இருந்தபோது அங்குள்ளவர்களைப் போல வெளிப்புறங்களில் அவர் முகக்கவசம் அணியவில்லை. ஆனால் உட்புறங்களில் இருந்தபோது தமது கைகளைக் கைச்சுத்திகரிப்பான் பயன்படுத்தி சுத்தம் செய்து முகக்கவசம் அணிந்துகொண்டதாக அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கு திரும்பியபோது விமானத்தில் அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. ரஷ்யாவில் இருக்கும் அவரது கணவருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரது மாமனாருக்கும் மாமியாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

கொவிட்-19: இரு பந்தயப்பிடிப்பு நிலையங்கள் மூடப்பட்டன

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்றதால் சிங்கப்பூரில் உள்ள இரண்டு பந்தயப்பிடிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சைனாடவுனில் உள்ள சைனா ஸ்குவேரில் இருக்கும் நிலையமும் ரோச்சோர் வட்டாரத்தில் அமைந்துள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கட்டடத்தில் உள்ள நிலையமும் மூடப்பட்டுள்ளது.

இவை இரண்டும் விளையாட்டுத் துறை பந்தயப்பிடிப்பு நிலையங்கள். சைனா ஸ்குவேரில் உள்ள பந்தயப்பிடிப்பு நிலையத்துக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் இம்மாதம் 17, 18, 19ஆம் தேதிகளில் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

ரோச்சோர் வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கட்டடத்துக்கு அந்த நபர் இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் சென்றதாக நிலையத்தை நடத்துபவர் தெரிவித்தார்.

ஜூலை 5ல் நாடாளுமன்ற கூட்டம்

ஜூலை மாதம் 5ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று அறிவித்தார்.

பொருத்தம் இல்லாத நிதிப் பரிந்துரைகள் அதிகரிப்பு

நிதி ஆலோசகர்களால் பொருத்தமற்ற நிதிப் பரிந்துரைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது அதிகரித்திருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

சாலைக்காட்சி விற்பனைகளின்போது அன்பளிப்புகள், சலுகைகள் போன்றவற்றை கொடுத்து வாடிக்கையாளர்களை அவர்கள்பால் ஈர்ப்பதாக ஆணையம் நடத்திய ரகசிய சோதனையில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் எளிதில் பாதிப்படையக்கூடிய வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பதில்லை என்று ஆணையம் கூறியது.

இத்தகையோரை அடையாளம் காண கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அது தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!