'சொந்த பேரன் போல்' என்று கூறி பாலியல் செயலில் ஈடுபட்ட 60 வயது ஆடவருக்குச் சிறை

'சொந்த பேரன் போல்' என்று கூறி பாலியல் செயலில் ஈடுபட்ட 60 வயது ஆடவருக்குச் சிறை

1 mins read
1292486d-5808-4e2f-850e-36efa17f3373
-

தன் பேர­னின் 14 வயது நண்­ப­னு­டன் நட்பு கொண்ட 60 வயது ஆட­வர், வாழ்க்­கைக்­குத் தேவை­யான அறி­வு­ரை­கள் கூற இளை­ய­ரைத் தின­மும் சந்­தித்து வந்­தார். இளை­ய­ரின் தந்­தையே அந்த ஆட­வரை அணுகி, தம் மக­னுக்கு அறி­வுரை கூறு­மாறு கேட்­டுக்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

அந்த இளை­ஞ­னைத் தன் சொந்த பேர­னா­கக் கரு­து­வ­தா­கக் கூறிய அந்த ஆட­வர், இளை­ஞ­னு­டன் சென்ற ஆண்டு ஜன­வரி மாதத்­தில் படிக்­கட்­டுத் தளம் ஒன்­றில் பாலி­யல் செய­லில் ஈடு­பட்­டார்.

ஆட­வ­ருக்கு நேற்று 20 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இளை­ஞ­னு­டன் கொண்ட நட்­பு­ற­வில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பாலி­யல் ரீதி­யாக உத­விக்­கொள்­ள­லாம் என்று தங்­க­ளுக்­குள் இருந்த உறவை ஆட­வர் தவ­றா­கப் புரிந்து­கொண்­ட­தாக ஆட­வ­ரின் வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

பாலி­யல் செய­லில் ஈடு­ப­ட­லாம் என்று ஆட­வர் கேட்­ட­போது இளை­ஞன் மறுத்­த­தா­கக் கூறப்­பட்­டது. இருப்­பி­னும், ஆட­வர் வற்­பு­றுத்தி இளை­ஞ­னின் கால்­சட்­டையை அகற்றி பாலி­யல் செய­லில் சுமார் 30 வினா­டி­க­ளுக்கு ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.