எரிசக்தி சந்தை ஆணையம்: விளம்பரத் தகவல்கள் பொய்

மின்­சா­ரத்­தைச் சேமிக்க உத­வும் சாத­னத்தை விளம்­ப­ரம் செய்­யும் இணை­யத்­த­ளம் ஒன்­றில், சிங்­கப்­பூ­ரின் மின்­சா­ரப் பய­னீடு குறித்­துக் குறிப்­பி­டப்­படும் தக­வல்­க­ளைப் பொய் என்று எரி­சக்­தி சந்தை ஆணை­யம் சுட்­டி­யுள்­ளது. 'வொல்­டெக்ஸ்' என்ற அச்­சா­த­னத்­திற்­கான விளம்­ப­ரங்­களில், சாத­னத்­தின் உத­வி­யு­டன் பய­னீட்­டா­ளர்­கள் தங்­க­ளின் மின்­சா­ரக் கட்­ட­ணத்­தில் 90 விழுக்­காட்­டைக் குறைக்க முடி­யும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

இணை­யத்­தில் இந்த விளம்­பரங்­கள் அண்­மை­யில் வலம் வந்த வண்­ணம் உள்­ளன. $74 விலை­யில் சாத­னம் விற்­கப்­ப­டு­கிறது.

'மின்­சா­ரத்­திற்­குச் செலுத்­தும் கட்­ட­ணம் போக அதற்கு மேல் பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் ஆண்­டுக்கு $27.6 பில்­லி­யன் செலுத்­து­கின்­ற­னர்' என்று பெயர் குறிப்­பி­டப்­ப­டாத ஆய்வு ஒன்றை மேற்­கோள் காட்­டும் விளம்­ப­ர­தா­ர­ரின் செய்தி இணை­யத்­த­ளத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த அதி­கப்­ப­டி­யான கட்­ட­ணம் குறித்து 'பொதுப் பய­னீட்டு ஆணை­யம்' ஒன்­றும் செய்­ய­வில்லை என்று கூறும் வித­மா­க­வும் அச்­செய்தி அமைந்­துள்­ளது. ஆனால் சிங்­கப்­பூ­ரில் 'பொதுப் பய­னீட்டு ஆணை­யம்' என்ற ஒன்று இல்லை.

இதை­ய­டுத்து கூறப்­படும் இக்­கூற்­று­கள் யாவும் பொய் என்று ஆணை­யம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் மின்­சா­ரக் கட்­ட­ணங்­க­ளு­டன் 'வொல்­டெக்ஸ்' இணை­யத்­த­ளத்­தின் இடம்­பெ­றும் கட்­ட­ணப் பட்­டி­யல் பொருந்­த­வில்லை என்­றது ஆணை­யம்.

இதற்­கி­டையே மக்­கள் தங்­க­ளின் மின்­சா­ரக் கட்­ட­ணங்­க­ளைக் குறைப்­ப­தற்கு வேறு வழி­களை நாடு­மாறு ஆணை­யம் அறி­வு­றுத்தி­ உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!