9 வயது பேத்தியை மானபங்கம் செய்தவருக்கு ஐந்தாண்டு சிறை

9 வயது பேத்தியை மானபங்கம் செய்தவருக்கு ஐந்தாண்டு சிறை

1 mins read
32d3d745-bf57-47ea-b844-96087c0d9b2b
-

போதைப்­பொ­ருள் குற்­றத்­துக்­காக பெற்­றோர் இரு­வ­ரும் சிறை­யில் இருந்­த­தால், அவர்­க­ளின் ஒன்­பது வயது மக­ளைப் பார்த்­துக்­கொள்­ளும் பொறுப்பு சிறு­மி­யின் தாத்­தா­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

ஆனால் அந்த ஆட­வரோ பல­முறை சிறு­மியை மான­பங்­கம் செய்­தார். 2012க்கும் 2013க்கும் இடைப்­பட்ட காலத்­தில் தற்­போது 69 வய­தா­கும் அந்த ஆட­வர், சிறு­மி­யின் உட­லைப் பிடித்­து­விடும் சாக்­கில் தகாத முறை­யில் தொட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

சிறு­மி­யின் ஆறு சகோ­த­ரர்­களும் பக்­கத்து அறை­யில் தூங்­கிக்­கொண்டு இருக்­கும் நேரத்­தில் ஆட­வர் இவ்­வாறு செய்­த­தா­கக் கூறப்­பட்­டது.

தற்­போது 18 வய­தா­கும் சிறு­மிக்கு பாலி­யல் துன்­பு­றுத்­தல் தந்­த­தாக சிறு­மி­யின் அண்­டை­வீட்­டுக்­கா­ரரை விசா­ரணை செய்­த­போது சிறு­மி­யின் தாத்தா புரிந்த குற்­றங்­கள் அம்­ப­ல­மா­கின.

அந்த அண்­டை­வீட்­டுக்­கா­ர­ருக்கு 20 ஆண்டு சிறைத் தண்­ட­னை­யும் 16 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டு­விட்­டன. சிறை­யி­லி­ருந்து 2014ஆம் ஆண்­டில் சிறு­மி­யின் தாயார் விடு­த­லை­யா­வ­தற்கு முன்­ன­தாக ஆட­வர் தமது முறை­கே­டான செயலை நிறுத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் தன் செயல்­களை எண்ணி ஆட­வர் வருந்­து­வ­தற்­கான அறி­கு­றி­கள் ஏதும் இல்லை என்­றும் மீண்­டும் குற்­றம் புரி­யும் சாத்­தி­யம் ஆட­வ­ருக்கு உண்டு என்­றும் மன­ந­லக் கழ­கத்­தின் பரி­சோ­தனை அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

நேற்று ஆட­வ­ருக்கு ஐந்து ஆண்டுச் சிறை விதிக்­கப்­பட்­டது.