பொதுத் துறை துரிதமாய் மின்னிலக்கமயமாக $3.8 பி.

பொதுத் துறை துரிதமாய் மின்னிலக்கமயமாக $3.8 பி.

2 mins read
9f5367ef-8984-4b14-bc57-51fa0fb5b3a6
-

பொதுத் துறை மின்­னி­லக்­க­ம­ய­மாக மாறு­வ­தைத் துரி­தப்­ப­டுத்த அர­சாங்­கம் இந்த நிதி ஆண்­டில் ஏறத்­தாழ $3.8 பில்­லி­யன் தொகையை தக­வல், தொடர்பு தொழில்­நுட்­பக் குத்­த­கை­க­ளுக்கு செல­வி­டும்.

கவ்­டெக் எனும் அர­சாங்­கத் தொழில்­நுட்ப அமைப்பு நேற்று இத­னைத் தெரி­வித்­தது.

கடந்த மார்ச் 31ம் தேதி முடிந்த நிதி ஆண்­டில் செல­வி­டப்­பட்ட $3.5 பில்­லி­யன் தொகை­யை­விட இது கிட்­டத்­தட்ட 10% அதி­க­மா­கும்.

நடப்பு நிதி அண்­டில் செலவு செய்­யப்­படும் தொகை­யில் ஏற்­கெனவே அறி­விக்­கப்­பட்ட திட்­டங்­களும் அடங்­கும். செயற்கை நுண்­ண­றி­வைக் கொண்டு பள்­ளிப்­பா­டங்­களை மதிப்­பி­டும் கட்­ட­மைப்பு, வாழ்­வின் வெவ்­வேறு கட்­டங்­களில் இருக்­கும் பய­னா­ளர்­க­ளுக்­குச் சேவை­களை வழங்­கும் லைப்­எஸ்ஜி செய­லிக்­கான மேம்­பா­டு­கள் அவற்­றில் சில.

அர­சாங்­கத்­தின் அந்த தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பக் குத்­த­கை­களில் சுமார் 83%, சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்று கவ்­டெக் அமைப்பு கூறி­யது.

குறை­வான நிதி மதிப்­பீடு கொண்ட சிறிய நடுத்தர நிறு­வ­னங்­களும் அர­சாங்­கக் குத்­த­கை­களில் விண்­ணப்­பம் செய்ய உத­வும் வகை­யில், சிறிய இணை­யக் கட்­ட­மைப்­பு­க­ளுக்கு கூடு­தல் சேவை­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் அர­சாங்­கம் சேர்க்­கும்.

முந்­தைய ஆண்­டு­க­ளின் முத­லீ­டு­கள் ஏற்­ப­டுத்­திய உத்­வே­கத்­தை­யும் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் மின்­னி­லக்­க­ம­யத்­தில் பெற்ற ஆதா­யங்­க­ளை­யும் இவ்­வாண்­டின் தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பச் செல­வி­னம் பயன்­ப­டுத்­திப் பெருக்­கும் என்று கவ்­டெக் அமைப்பு அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

$3.8 பில்­லி­யன் தொகை­யில் $500 மில்­லி­யன், பொதுத் துறை­யில் செயற்கை நுண்­ண­றிவு பயன்­பாட்டை அதிகரிக்க ஒதுக்­கப்­படும்.

மேம்­பட்ட சேவை­களை வழங்­க­வும், தர­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சிறந்த முடி­வு­களை எடுக்­க­வும் உற்­பத்­தித் திற­னைப் பெருக்க செயல்­பா­டு­களை மேம்­ ப­டுத்­த­வும் செயற்கை நுண்­ண­றிவு ஆற்­றல் அர­சாங்­கத்­துக்கு உத­வும் என்று அமைப்பு கூறி­யது.

மேலும் $2.7 பில்­லி­யன் தொகை, பல்­வேறு துறை­களில் மின்­னி­யல் சேவை­களை மாற்­றி­ய­மைத்து, ஒருங்­கி­ணைக்­க­வும் சீர­மைக்­க­வும் பயன் ­ப­டுத்­தப்­படும். இதன் தொடர்­பில் 250 திட்­டங்­கள் கொண்­டு­வ­ரப்­படும்.

இச்­சே­வை­களில் 44%, குடி­மக்­க­ளுக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்­கு­மான சேவை­க­ளைத் துரி­தப்­ப­டுத்­தும். இணை­யம் வழி­யான கிள­வுட் (cloud) கணினி முறை­யில் அவை உரு­வாக்­கப்­படும்.

2024 மார்ச் 31ம் தேதிக்­குள் தகு­தி­பெ­றும் பொதுச் சேவை­களில் 70 விழுக்­காட்டை இணை­யம் மூலமாக வழங்க அர­சாங்­கம் திட்­ட­மி­டு­கிறது என்று கவ்டெக் அமைப்பு கூறியது.