பயண கட்டுப்பாடு தளர்வு: சிங்கப்பூர், வியட்னாம் பரிசீலனை

சிங்­கப்­பூ­ரும் வியட்­னா­மும், வர்த்­த­கத்­துக்கும் சில குறிப்­பிட்ட சுற்­றுப்­ப­ய­ணத் தளங்­க­ளுக்­கு­மான பய­ணக் கட்­டுப்­பா­டு­களை மெது­வா­கத் தளர்த்­து­வது பற்றி பரி­சீ­லித்து வரு­வ­தாக வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.

எனி­னும் வியட்­னாம் அதன் மக்­க­ளுக்கு எவ்­வ­ளவு விரை­வா­கத் தடுப்­பூசி போடு­கிறது என்­ப­தைப் பொருத்தே தளர்­வு­கள் சாத்­தி­யப் படும் என்­றார் அவர்.

வியட்­னாம் தலை­ந­கர் ஹனோய்க்கு மேற்­கொண்ட நான்கு நாள் பய­ணத்­துக்­குப் பின்­னர் டாக்­டர் விவி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் ஸூம் வழி­யா­கப் பேசி­னார்.

ஹனோ­யில் புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட வியட்­னா­மிய அதி­பர் இங்­யு­வேன் சுவான் புக், பிர­த­மர் பாம் மின் சின், துணைப் பிர­த­மர் பாம் பின் மின் ஆகி­யோரை அவர் சந்­தித்­தார்.

பெருந்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இரு நாடு­களும் ஒரே வித­மான உத்­தி­யைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ளன. தீவி­ர பரி­சோ­த­னை­கள், தனி­மை­யில் வைத்­தி­ருப்­பது, பர­வ­லா­கத் தடுப்­பூ­சி­யைப் போடு­வது ஆகி­யவை அதில் அடங்­கும்.

வியட்­னா­மில் கடந்த ஏப்­ரல் மாதம் தொடங்­கிய மோச­மான கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த கடும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. அவ­சி­ய­மற்ற வர்த்­த­கங்­கள் மூடப்­பட்­ட­து­டன் ஒன்­று­கூ­டு­தல்­களும் குறைக்­கப்­பட்­டன.

ஏறத்­தாழ 98 மில்­லி­யன் பேர் கொண்ட அதன் மக்­கள்­தொ­கை­யில் 2 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

கட்­டுப்­பாட்டுத் தளர்­வு­களை அடுத்த சில மாதங்­களில் அல்­லது இவ்­வாண்டு இறு­திக்­குள் தொடங்­கு­வது பற்றி இரு நாடு­களும் பரி­சீ­லித்து வரு­வ­தா­க­வும் டாக்­டர் விவி­யன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!