'நிலைத்­தன்­மை­யான உள்­கட்­ட­மைப்­பில் வாய்ப்­பு­கள்'

'நிலைத்­தன்­மை­யான உள்­கட்­ட­மைப்­பில் வாய்ப்­பு­கள்'

1 mins read
1ac25ee3-d904-4d81-8565-e75251d63744
-

கொரோனா பெருந்தொற்று சூழ­லில் தர­மான, நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய உள்­கட்­ட­மைப்பு சவா­லான ஒன்று. அத்­து­டன், பரு­வ­நிலை மாற்­றம், வேக­மாக நக­ர­ம­ய­மா­கி­வ­ரும் சூழல் இதை மேலும் சிக்­க­லாக்­கி­யுள்­ளது.

எனினும் இதில் தனி­யார் துறை, பன்­னாட்டு வளர்ச்சி வங்­கி­கள், அர­சாங்கத் துறை போன்­ற­வற்­று­டன் பங்­கா­ளித்­துவ அடிப்­ப­டை­யில் வாய்ப்­பு­கள் உள்­ள­தாக பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா கூறி­யுள்­ளார்.

நிதி­ அ­மைச்சு, என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு, சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், 'இன்­ஃபி­ராஸ்ட்­ரக்­சர் ஆசியா' நிறு­வ­னம் ஆகி­யவை நடத்திய ஆசிய உள்­கட்­ட­மைப்பு மாநாட்­டில் அவர் பேசினார்.

கொவிட்-19 பெருந்தாற்று உல­கப் பொரு­ளி­யல் 4.5% வீழ்ச்­சிகாண கார­ண­மா­கி­விட்­ட­து. அனைத்து ஆசி­யா­ன் நாடு­களும் தங்­கள் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 7.6 % அளவு நிதிப் பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கி­ன.

"செல­வின அதி­க­ரிப்பு, கட்­டு­மா­னப் பணி­களை முடுக்­கி­வி­டு­தல், வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­தல் போன்­ற­வற்­றால் ஏற்­படும் உள்­கட்­ட­மைப்பு வளர்ச்சி பொரு­ளி­யல் மீட்­சிக்கு வழி­வி­டும் என்று ஆசிய நாடு­களும் பன்­னாட்டு வளர்ச்சி வங்­கி­களும் அடை­யா­ளம் கண்­டுள்­ளன. சில நாடு­கள் ஏற்­கெ­னவே உள்­கட்­ட­மைப்பு வளர்ச்­சியை துரி­தப்­ப­டுத்­தி­யு­ள்­ளன."

"நாடு­கள் தங்­கள் வளங்­களை பெருந்தொற்றை எதிர்ப்­ப­தில் செல­விட்டு வரு­ம் ­வே­ளை­யில் தனி­யார், பொதுத் துறை­கள் செய்­யும் கூடு­தல் முத­லீடு வர­வேற்­கப்­பட வேண்­டிய ஒன்று," என்றார் அவர்.