ரொட்டி, கேக் பொருட்களில் கஞ்சா; அதிகாரிகள் சந்தேகம்

ரொட்டி, கேக் பொருட்களில் கஞ்சா; அதிகாரிகள் சந்தேகம்

1 mins read
64546a23-0f3d-42ae-9ad4-d5846ccc5931
கஞ்சா மற்றும் கஞ்சா கலக்கப் பட்டதாக நம்பப்படும் ரொட்டி, கேக் போன்றவை சிக்லாப்பில் சிக்கின. படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு -

கஞ்சா கலக்­கப்­பட்ட ரொட்டி, கேக் போன்ற வாட்­டப்­பட்ட பொருட்­களும் 3 கிலோ­வுக்­கும் அதிக எடை­யுள்ள கஞ்­சா­வும் பிடி­பட்­டுள்­ளன.

மூன்று ஆட­வர்­களும் ஒரு மாதும் செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­யப்பட்­ட­னர். அவர்­க­ளுக்கு வயது 25 முதல் 38 வரை என்று மத்­திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரி­வித்­தது.

சிக்­லாப் வாக் அருகே ஒரு வீட்­டில் அவர்­கள் சிக்­கி­னர். 3,159 கிராம் கஞ்சா, 14 கிராம் ஐஸ், 9 கிராம் கொக்­கேன், 79 எக்­ஸ்டசி மாத்­தி­ரை­கள், எரி­மின்-5 மாத்­திரை, 108 எல்­எஸ்டி முத்­தி­ரை­கள், கஞ்சா கலக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­படும் ரொட்டி போன்ற 51 பொருட்­கள் ஆகி­ய­வற்றை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர். $4,100 பண­மும் சிக்­கி­யது. பிடி­பட்ட போதைப்பொரு­ளின் மதிப்பு $57,000க்கும் அதி­கம்.

கைதான அனை­வ­ரும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வதாக அந்­தப் பிரிவு தெரி­வித்­தது.