சட்டவிரோத கடன்தொழில், சூதாட்டம்: 36 பேர் கைது

1 mins read
68a013b2-bd1d-47f3-a877-f6c4c801031c
-

கடன் கொடுத்து வாங்க சட்­ட­விரோ­த­மான முறை­யில் கும்­பல் ஒன்றை நடத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­ட­தன் தொடர்­பில் போலி­சார் 35 ஆட­வர்­க­ளை­யும் ஒரு மாதை­யும் கைது செய்­துள்­ள­னர்.

பல்­வேறு சட்­ட­வி­ரோத சூதாட்டக் குற்­றங்­க­ளி­லும் அவர்­கள் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள் என்று போலிஸ் சந்தேகப்படுகிறது.

புலன்­வி­சா­ர­ணைத் துறை ­அ­தி­கா­ரி­களும் வேவுத் துறை அதி­காரி­களும் சிறப்பு நட­வ­டிக்கை தள­பத்­தி­யத்­தைச் சேர்ந்தவர்­களும் தீவு முழு­வ­தும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்­தி­னர்.

தெம்­ப­னிஸ், பீஷான், புக்­கிட் பாத்­தோக் உள்­ளிட்ட பல்­வேறு இடங்­களிலும் அவர்­கள் சோதனை யிட்­ட­னர்.

கைதா­ன­வர்­க­ளுக்கு வயது 26 முதல் 63 வரை என்று போலி­ஸ் அறிக்கை தெரி­வித்­த­து.

சோத­னை­களில் $770,000க்கும் அதி­க­மான பணம், கணினி, கை பே­சி­கள் போன்ற சாத­னங்­கள் பிடி­பட்­டன. கைதாகி இருக்­கும் 36 பேரின் வங்­கிக் கணக்­கு­களும் முடக்­கப்­பட்­டுள்­ளன.

பிடி­பட்­ட­வர்­களில் பத்து பேர், தொலை தூர சூதாட்­டச் சட்­டம், சட்­ட­வி­ரோத கடன்தொழில் சட்­டம் ஆகி­ய­வற்­றின்கீழ் சுமத்­தப்­படும் குற்றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­வார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.