காதலர்களுக்குள் ஏற்பட்ட ஊடல் வன்செலயலாக மாறியது. ஆடவர் தன் காதலியின் முடியைப் பிடித்து இழுத்து தலையில் உதைத்தார்.
இந்தச் சம்பவம் சென்ற ஆண்டு ஜூலை 29ஆம் தேதி செந்தோசாவில் உள்ள 'ரூமர்ஸ் பீச் கிளப்' என்ற நிலையத்திற்கு வெளியே நிகழ்ந்தது.
தனது காதலியான 31 வயது பெண்ணை நான்கு நிமிடங்கள் தாக்கியதற்காக ரஹிமான் ரஹிம், 31, என்ற அந்த ஆடவருக்கு நேற்று இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது ரஹி மான் முகக்கவசம் அணியாமல் இருந்ததாகக் கூறப்பட்டது. இது தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் கொள்ளப்பட்டது. இருவரும் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பிரிந்துவிட்டனர்.
2020 நவம்பரில் சைனாடவுன் பாயிண்டில் டாக்சி ஓட்டுநர் ஒருவரைப் பிடித்து கீழே தள்ளியதற்காக நேற்று ரஹிமானுக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

