தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்குச் சலுகைகள்

தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்குச் சலுகைகள்

2 mins read
5008b160-2410-4dbf-9d9d-19664eb73a79
நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் (வலமிருந்து) சுகாதார அமைச்சர் ஓங் யி காங், வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், நிதியமைச்சர் லாரன்ஸ் வோங், சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

இல்லத் தனிமை உத்தரவுக்குப் பதில் அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ளவும் பெரிய ஒன்றுகூடலில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படலாம்

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­க­ளுக்கு வீட்­டில் தங்­கி­யி­ருக்க வேண்­டிய உத்­த­ரவு நீக்­கப்­ப­ட­லாம். தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் செல்­ல­வும் சிங்­கப்­பூ­ரில் பெரிய அள­வி­லான ஒன்­று­கூ­டல்­களில் பங்­கேற்­க­வும் அனு­ம­திக்­கப்­ப­ட­லாம்.

சிங்­கப்­பூ­ரில் கொரோனா தடுப்­பூசி நட­வ­டிக்கை முடுக்­கி­வி­டப்­பட்டுள்ள நிலை­யில் இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

இவ்­வாண்டு தேசிய தினத்­திற்­குள் தனது மக்­கள்­தொ­கை­யில் மூன்­றில் இரு பங்­கி­னர்க்­குத் தடுப்­பூசி போட சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது.

எல்­லாக் காலங்­க­ளி­லும் ஏற்­படக்­கூ­டிய, நிரந்­தர நோயாக கொவிட்-19 இருந்­து­வி­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­படும் நிலை­யில், அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தன்­மூ­லம் கொரோனா தொற்­று­டன் இயல்­பாக வாழ சிங்­கப்­பூர் திட்­ட­மிட்டு வரு­கிறது என்று கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று முன்­தி­னம் தெரி­வித்து இருந்தது.

அதா­வது, சிங்­கப்­பூ­ரர்­கள் உட்­பட சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­று­வ­தற்­குப் பதி­லாக அடிக்­கடி கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

"அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­போது பய­ணத்­தை­யும் நம்­மால் மீண்­டும் தொடங்க இய­லும். தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும்­போது அல்­லது சிங்­கப்­பூர் திரும்­பும்­போது சில சலு­கை­கள் வழங்­கப்­ப­ட­லாம்," என்று பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரும் வர்த்­தக, தொழில் அமைச்­ச­ரு­மான கான் கிம் யோங் நேற்­றைய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது கூறி­னார்.

"எடுத்­துக்­காட்­டாக, வெளி­நாட்­டிற்­குச் சென்று திரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­கள் உட்­பட தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­று­வதற்­குப் பதி­லாக அடிக்­கடி பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்டி­ இ­ருக்­க­லாம்," என்­றார் அவர்.

இத­னி­டையே, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர்க்­கான பொதுச் சுகா­தார நெறி­மு­றை­களை அர­சாங்­கம் திருத்­தி­ய­மைக்­கும் என்று நிதி­ அமைச்­ச­ரும் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான லாரன்ஸ் வோங், செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது தெரி­வித்­தார்.

"தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மட்­டும் பங்­கேற்­கும் பெரிய அள­வி­லான ஒன்­று­கூ­டல்­களை அனு­ம­திக்க முடி­யும்; அச்­சூ­ழல்­களில் சமூக இடை­வெளி விதி­யை­யும் தளர்த்த இய­லும்," என்று திரு வோங் கூறி­னார்.

தடுப்பூசி அவசியம்: பிரதமர் வலியுறுத்து

கொவிட்-19 கிருமியுடன் வாழ தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியமான உத்தி என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். கொரோனாவை நம்மால் அழித்து ஒழிக்க முடியாது என்றாலும் சளிக்காய்ச்சலைப் போல அதனைச் சமாளிக்க முடியும் என்றும் ஃபேஸ்புக் பதிவு வழியாக அவர் கூறி இருக்கிறார். தடுப்பூசியால் தொற்றை முழுமையாகத் தடுக்க முடியாது போனாலும் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்படுவதில் இருந்து அது நம்மைக் காக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அதிக நடவடிக்கைகளைத் தொடங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.