அமெரிக்க உயிர்தொழில்நுட்ப நிறுவனமான நோவாவேக்சிடம் இருந்து இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி தொடர்பில் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் சுகாதார அமைச்சு கடந்த ஜனவரியில் உடன்பாடு செய்துகொண்டது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார். புரதத்தை அடிப்படையாகக் கொண்ட நோவாவேக்ஸ் தடுப்பூசி, கொரோனா கிருமிக்கு எதிராக 90 விழுக்காட்டிற்கும் மேலான செயல்திறனைக் கொண்டிருப்பதாகக் கூறப் படுகிறது. ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளைப் போலவே நோவாவேக்ஸ் தடுப்பூசியையும் இருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்.
ஆண்டிறுதிக்குள் 'நோவாவேக்ஸ்'
1 mins read
-

