பயன்படுத்துவதற்கு ஏற்ப சந்தா: புதிய என்டியுசி காப்புறுதி

பயன்படுத்துவதற்கு ஏற்ப சந்தா: புதிய என்டியுசி காப்புறுதி

1 mins read
ce229098-df52-4ef1-8bd5-b1e5d6f4e47f
மின்சார வாகன ஓட்டுநர்கள், வாகனம் ஓடி இருக்கும் கி.மீ. தொலைவுக்கு ஏற்ப சந்தா செலுத்தினால் போதும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

மின்சாரத்தில் ஓடும் வாகன ஓட்டுநர்களுக்குப் பயன்பாட்டுக்கு ஏற்ப காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கும் ஒரு திட்டத்தை என்டியுசி இன்கம் நிறுவனம் நடப்புக்குக் கொண்டு வந்துள்ளது.

அந்தத் திட்டத்தில் மூன்று வகை உண்டு.

வாகன ஓட்டுநர்கள் அவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

தங்கள் வாகனம் எவ்வளவு கி.மீ. தொலைவு ஓடி இருக்கிறதோ அதற்கு ஏற்ப சந்தா செலுத்தலாம். இந்தத் தகவலை என்டியுசி இன்கம் நேற்று தெரிவித்தது.

சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் காப்புறுதிப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பது இன்கமின் இலக்கு.

அதோடு, சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030க்கு ஆதரவாக மின்சார வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதற்கு ஊக்கமூட்டுவதும் அதன் நோக்கம்.

வெவ்வேறான வாழ்க்கை பாணிகளைக் கொண்டுள்ள வாகன உரிமையாளர்களுக்கு இந்தக் காப்புறுதித் திட்டங்கள் சேவையாற்ற முடியும் என்று இன்கம் தெரிவித்துள்ளது.