சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மேலும் உதவி பெறும்

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மேலும் உதவி பெறும்

1 mins read
c827a120-4733-4f65-a567-1b4b01ee42ba
-

கொவிட்-19 தொற்று காரணமாக இன்னமும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கும் தனிப்பட்டவர்களும் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் தங்கள் கடனை அடைக்க மேலும் கால அவகாசத்தைப் பெறுவார்கள்.

கடன் வாங்கியவர்களுக்கான ஆதரவு நடவடிக்கைகள் ஜூன் 30ஆம் தேதி முடிவடையவிருந்தன. ஆனால் அவை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு நடைமுறைக்கு வந்த அந்த ஆதரவு நடவடிக்கைகள் கடன் வாங்கியவர்களுக்கு உதவி இருக்கின்றன.

இன்னமும் பாதிப்பில் இருப்போருக்கு உதவும் வகையில் இப்போது இந்த ஆதரவு திட்டங்கள் இறுதியாக நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்கு நர் ரவி மேனன் கூறினார்.

'நீட்டிப்பு ஆதரவுத் திட்டம்' என்று குறிப்பிடப்படும் இந்தத் திட்டம், பண நெருக்கடியை எதிர்நோக்கும் தனிப்பட்டவர்களும் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் படிப்படியாக முழு கடனையும் அடைக்கத் தொடங்குவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. தங்களுடைய கடன் அடைப்பு ஏற்பாடுகளைத் திருத்தி அமைத்துக்கொள்ள உதவும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சிங்கப்பூரில் பொருளியல் படிப்படியாகத் திறந்துவிடப்படுகிறது. கடன் வாங்கி இருப்போரில் பெரும்பாலானவர்கள் கடனை அடைக்கத் தொடங்கி உள்ளனர்.

இருந்தாலும் கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக தனிப்பட்டவர்கள் சிலரும் சில நிறுவனங்களும் இன்னமும் பண நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன.

கடன் வாங்கியவர்களுக்கு தொற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்பு ஒரே சீராக இல்லை என்றும் ஆணையம் தெரிவித்தது.