செம்ப்கார்ப் மரின் $1.5பி. உரிமைப் பங்குகள் உத்தேசம்

செம்ப்கார்ப் மரின் $1.5பி. உரிமைப் பங்குகள் உத்தேசம்

1 mins read
953b513c-c2d5-4e28-a1fc-40da8950a106
-

செம்ப்கார்ப் மரின் நிறுவனம் கொவிட்-19 சூழல் தொடரும் நிலையில், தன் நிதிநிலையைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் மேலும் $1.5 பில்லியன் உரிமைப் பங்குகளை வெளியிட உத்தேசித்து இருக்கிறது.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் அறிக்கையில் இதனை அந்த நிறுவனம் தெரிவித்தது.

கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறுவனத்துடன் சேர்வதற்கான சாத்தியம் பற்றி ஆராய கெப்பல் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டு இருப்பதாக அறிவித்த அதேநாளில், இந்த பங்கு உத்தேச அறிவிப்பையும் செம்ப்கார்ப் வெளியிட்டுள்ளது. உரிமைப் பங்கு வெளியீடு, சுற்றுச் சூழலுக்கு உகந்த எரிசக்தி முயற்சிக்கு உதவும் என்றது அது.