ராணுவ மின்னிலக்கப் படிவத்திற்கு விருது

ராணுவ மின்னிலக்கப் படிவத்திற்கு விருது

1 mins read
2b3a0f2e-66b5-4ee1-9d2f-b9afbbbd54ad
-

தற்காப்பு அமைச்சின் 'துணிந்து செய்' விருதை ஒன்பது பேர் பெற்று இருக்கிறார்கள். அந்த விருது பல காரியங்களைச் சிறப்பாக செய்வதற்கான புதிய வழிகளை அடையாளம் காணும் முயற்சிகளை அங்கீகரிக்கிறது.

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று புக்கிட் கொம்பாக்கில் உள்ள தற்காப்பு அமைச்சு தலைமையகத்தில் புத்தாக்க கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.

அதில் விருது வழங்கும் நிகழ்ச்சி சிறிய அளவில் நடந்தது. சிங்கப்பூர் ராணுவத்தின் கொவிட்-19 மின்னிலக்க அறிவிப்புப் படிவத்திற்கு அந்த விருது கிடைத்துள்ளது.

சிங்கப்பூர் ஆயுதப் படை முகாம்களுக்குள் செல்வதற்கு முன்பாக வருகையாளர்கள் அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதை ராணுவ மின்னிலக்கமய அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு குழு உருவாக்கியது.