நொடித்துப்போன எண்ணெய் நிறுவனமான ஹின் லியோங் நிறுவனத்தின் நிறுவனரான லிம் ஓன் குயின் மீது கூடுதலாக 105 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
79 வயது லிம் மொத்தம் 130 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் மொத்தம் 2.7 பில்லியன் அமெரிக்க டாலருடன் தொடர்புடையவை.
லிம்முக்கான பிணைத் தொகை $3 மில்லியனிலிருந்து $4 மில்லியனுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
3.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பாக்கி இருந்த நிலையில், எண்ணெய் விலை சரிந்தபோது ஹின் லியோங் நிறுவனம் நொடித்துப்போனது.
அப்போது பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தன.

