மெய்­நி­கர் வழி அதி­க­மான கலைப் படைப்பு முயற்­சி­கள்

மெய்­நி­கர் வழி அதி­க­மான கலைப் படைப்பு முயற்­சி­கள்

2 mins read
265f43c1-7a26-4197-987a-4055e90dbfa7
மலே­சிய இந்­தி­யக் கலை­ஞர் இயக்­கத்­தின் தலை­வ­ரும் ஜோகூர் பாரு பிரி­வின் இயக்­கு­ந­ரு­மான திரு சிவ­கு­மா­ரும் (இடது) சிங்­கப்­பூர் புத்­தாக்க இந்­திய கலை­ய­கத்­தின் தலை­வர் திரு குண­சே­க­ர­னும் மெய்­நி­கர் வழி உரை­யா­டி­னர். படம்: சிங்­கப்­பூர் புத்­தாக்க இந்­திய கலை­ய­கம் -

சிங்­கப்­பூர் புத்­தாக்க இந்­திய கலை­ய­கம் 'மெய்­நி­கர் வழி கலை பேச்சு' என்ற இணைய பகிர்வு நிகழ்ச்­சியை இம்­மா­தம் 12ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு நடத்­தி­யது.

இந்த மாறு­பட்ட வாழ்க்­கைச் சூழ­லில், சிங்­கப்­பூ­ரை­யும் தாண்டி உல­க­ளா­விய முறை­யில் நமது அண்டை நாடு­களில் இயங்­கும் தமிழ் அமைப்­பு­க­ளோடு இணைந்து அனை­வ­ரும் பயன்­பெ­றும் நிகழ்ச்சி களை நடத்­தும் நோக்­கத்­து­டன் இது ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

மலே­சிய இந்­தி­யக் கலை­ஞர் இயக்­கத்­தின் (PAAIM) தலை­வ­ரும் ஜோகூர் பாரு பிரி­வின் இயக்­கு­ந­ரு­மான திரு சிவ­கு­மா­ரும் சிங்­கப்­பூர் புத்­தாக்க இந்­திய கலை­ய­கத்­தின் தலை­வர் திரு குண­சே­க­ர­னும் மெய்­நி­கர் வழி நேர­டி­யாக உரை­யாடி பல சுவைத் தக­வல்

களைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

மலே­சிய நாட்­டின் தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் அங்கு கலைத்­துறை நோக்­கிச் செல்­லும் பாதை, எதிர்­கொள்­ளும் சவால்­களை விளக்­கி­ய­து­டன் சமூக ஊட­கங்­கள், இணைய பயன்­பா­டு­கள் மூலம் எத்­த­கைய புத்­தாக்க நட­வ­டிக்­கை­களை எடுக்க முடி­யும் என்­பது பற்றி இரு­வ­ரும் கலந்­து­ரை­யா­டி­னர்.

இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி யில் திரு குண­சே­க­ரன், கைபேசி வழி எத்­த­கைய செயல்­பா­டு­க­ளை­யும் படைப்­பு­க­ளை­யும் செய­லி­கள் மூலம் உரு­வாக்க முடி­யும் என்று அனை­வ­ரும் புரிந்­து­கொள்­ளும் வகை­யில் விளக்­கி­னார்.

பெரும்­பா­லான நேரங்­களில் நம் முன் இருக்­கும் கரு­வி­கள் மூலம் உயர்­த­ர­மான ஒலி, ஒளி மற்­றும் முப்­ப­ரி­மாண தயா­ரிப்­பு­க­ளு­டன் பொருள் ஈட்­டக்­கூ­டிய உயர்­த­ர­மான கலைப் படைப்­பு­க­ளைத் தயா­ரிக்­கும் உத்­தி­களை அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

இதன் மூலம், சிங்­கப்­பூர், மலே­சிய கலை­ஞர்­க­ளுக்கு இடையே இருக்­கும் கலைத் தாகம் தீர்வ

தற்கு வீட்­டில் இருந்­தா­லும் வெளி­யு­ல­கைச் சென்­ற­டை­வ­தற்­கான வழி­மு­றை­க­ளை­யும் இங்கு விளக்­க­மா­கப் பதிவு செய்­தார்­கள்.

மேலும் அனை­வ­ரும் பயன்

பெறும் வகை­யில், தொடர்ந்து இணைய பகிர்­வு­கள், பேட்­டி­கள், பயி­ல­ரங்­கு­கள் மூலம் இன்­னும் அதி­க­மான புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­தும் ஆக்­க­பூர்­வ­மான சிந்­த­னை­கள் ஆகி­யவை பற்றி இரு அமைப்­பு­க­ளின் தலை­வர்­களும் வெளிப்­ப­டுத்­தி­னர்.

இந்த காலம், வழங்­கி­யி­ருக்­கும் புதிய வாய்ப்­பு­களை அனை­வ­ரும் பயன்­ப­டுத்தி, புத்­தாக்க சிந்­தனை

களோடு தர­மான கலை­ஞர்­க­ளாக வளர்­வ­தற்கு உரிய தேடல்­க­ளின் தொடக்­க­மாக இந்த நிகழ்ச்சி அமைந்­தது. இதனை தொடர்ந்து, மொரி ஷியஸ், கனடா, அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­கள் மற்­றும்

தமி­ழர்­கள் வாழும் அனைத்து

பகு­தி­க­ளுக்­கும் சென்­ற­டை­யும் வகை­யில் இணை­யம் வழி கலை வளர்ப்பு முயற்சி தொடர இருக்­கிறது. இந்­நி­கழ்ச்­சி­யின் இணைய பதிவை https://youtu.be/q3XEUp-L_yI எனும் முக­வ­ரி­யில் கண்டு மகி­ழ­லாம்.