கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக விதிக்கப்பட்ட இல்லத் தனிமை உத்தரவை மீறிய அமெரிக்க நாட்டவருக்கு ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதியன்று 38 வயது பாய் ஃபான் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான பாய் சிங்கப்பூர் வந்ததும் ஃபேர்மோண்ட் ஹோட்டல் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி வரை அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் தமது 38வது பிறந்தநாளை முன்னிட்டு ஹோட்டலிலிருந்து வெளியேறி தமது மனைவியை அவர் சந்தித்தார். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு தமது மனைவியுடன் அவர் காரில் இருந்தார். அவரது 41 வயது மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து தகவல் ஏதுமில்லை .

