சிங்கப்பூரில் பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகத்தினரின் தேவைகளை அறிந்து நடந்துகொள்வது முக்கியம் என்றும் பல இன சமுதாயத்தில் சிறுபான்மையாக இருப்பது அதிக சிரமம் என்றும் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இது வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார். வேலை தேடுவோர், வாடகை வீட்டைத் தேடுவோர், ஆகியோர் சிறுபான்மை இனத்தவராக இருக்கும்போது இருக்கும்போது பல முறை பாகுபாட்டை எதிர்நோக்குவதாக திரு வோங் சுட்டினார்.
"இவை போன்றவை நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் எப்போதும் நடப்பதில்லை.இருந்தபோதும் நடக்கும்போது உண்மையான, கடுமையான வலியை உண்டாக்குகின்றன," என்று இனம், இனவாதம் பற்றிய கருத்தரங்கில் இன்று பேசும்போ து திரு வோங் கூறினார்.

