நிதித்துறை: பயிற்சி மானியம், கட்டணச் சலுகை நீட்டிப்பு

நிதித்துறை: பயிற்சி மானியம், கட்டணச் சலுகை நீட்டிப்பு

2 mins read
208413bd-63d9-4f1e-8381-01764036d0ba
-

பயிற்­சிக் கட்­ட­ணச் சலுகை, பயிற்சி மானி­யம் உட்­பட மேம்­படுத்­தப்­பட்ட பயிற்சி ஆத­ரவு நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வங்­கி­யியல், நிதி நிலை­ய­மும் (ஐபி­எஃப்) நீட்­டிக்­க­வுள்­ளன.

நீட்­டிக்­கப்­படும் ஆத­ரவு படிப்­படி­யா­கக் குறைக்­கப்­பட்டு, 2022 ஜூலை 1ஆம் தேதி நிறுத்­தப்­படும் என்று அவ்­விரு அமைப்­பு­களும் நேற்று ஒரு கூட்­ட­றிக்கை வழி­யா­கத் தெரி­வித்­துள்­ளன.

ஐபி­எஃப்-தர­நி­லை­கள் பயிற்­சித் திட்­டம் (ஐபி­எஃப்-எஸ்­டி­எஸ்) மற்­றும் நிதி­யி­யல் பயிற்­சித் திட்­டத்­தின்­கீழ் (எஃப்டி­எஸ்) வரும் பயிற்­சி­க­ளுக்கு, இவ்­வாண்டு டிசம்­பர் 31ஆம் தேதி வரை நிதி­யி­யல் துறை மேம்­பாட்டு நிதி­யின்­மூ­லம் 90% கட்­ட­ணச் சலுகை வழங்­கப்­படும். அப்­ப­யிற்­சித் திட்­டங்­க­ளுக்கு முறையே அதி­க­பட்­சம் $7,000 மற்­றும் $2,000 கட்­டணச் சலுகை வழங்­கப்­படும்.

அதன்­பின் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை 80 விழுக்­கா­டா­க­வும் அதற்­குப் பிறகு முறையே 70 விழுக்­கா­டா­க­வும் 50 விழுக்­கா­டா­க­வும் கட்­ட­ணச் சலுகை குறைக்­கப்­படும்.

40 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அடுத்த ஆண்­டி­லும் தொடர்ந்து 90% கட்­டணச் சலுகை வழங்­கப்­படும்.

நிதியியல், நிதித் தொழில்நுட்ப நிறு­வ­னங்­க­ளின் ஆத­ரவு பெற்ற ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்­சிப் படித்­தொகை மானி­யம் 2022 ஜூன் 30 வரை நீட்­டிக்­கப்­படும். அத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு நிதித்­துறை மேம்­பாட்டு நிதி­யின்­கீழ் இப்­போது மணிக்கு 15 வெள்ளி வழங்­கப்­பட்டு வரும் நிலை­யில், அது மணிக்­குப் பத்து வெள்­ளி­யா­கக் குறைக்­கப்­படும்.

கடந்த 2020 ஏப்­ர­லில் ஆத­ரவு நட­வ­டிக்­கை­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு, அதே ஆண்டு நவம்­பரில் அவை நீட்­டிக்­கப்­பட்­ட­பின் பயிற்சி­யில் பங்­கேற்­போர் விகி­தம், ஆண்டு அடிப்­ப­டை­யில், 60% கூடி­யி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. கிட்­டத்­தட்ட 500 நிதித்­துறை நிறு­வ­னங்­கள் அந்த ஆத­ர­வைப் பெற்­றுள்­ளன.