சிங்கப்பூரில் மேலும் 20 பேரை கொரோனா தொற்றியிருப்பதைச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 62,513 ஆனது.
புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 15 பேர் சமூகத்தில் இருப்போர். அவர்களில் 12 பேர் முன்னர் கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்கள்; மற்ற மூவரும் தொடர்பில்லாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்த ஐவர்க்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

