சமய அமைப்புகளுக்கு உதவும் தொழில்நுட்ப நிறுவனங்கள்

சமய அமைப்புகளுக்கு உதவும் தொழில்நுட்ப நிறுவனங்கள்

2 mins read
90220445-dbe9-41bd-b595-709c86254564
-

கி.ஜனார்த்­த­னன்

புதி­ய­தொரு திட்­டத்­தின்­படி, கூகல், ஃபேஸ்புக், டுவிட்­டர், டிக்­டாக் ஆகிய நான்கு தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களும் சிங்கப்பூர் சமய, சமூக அமைப்­பு­க­ளுக்­குப் பயிற்சி வழங்­க­ இ­ருக்­கின்­றன.

இம்­மா­தம் முதல் ஆகஸ்ட் வரை நடை­பெ­றும் மூன்று பயி­ல­ரங்­கு­களில் சமய, சமய நல்­லி­ணக்க, இன நல்­லி­ணக்க அமைப்பு­க­ளைச் சேர்ந்த 40க்கும் மேற்­பட்­டோர் பங்­கேற்­பர்.

கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சின் ஆத­ர­வு­டன் இன, சமய நல்­லி­ணக்­கத்­திற்­கான தேசிய வழி­காட்­டு­தல் குழு நடத்­தும் 'கிரி­யேட் அண்ட் கனெக்ட்' மின்­னி­லக்க ஊடக பயி­ல­ரங்­கின் ஒரு பகு­தி­யாக இம்­மூன்று பயி­ல­ரங்­கு­களும் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

இந்து அறக்­கட்­டளை வாரி­யம், சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம், சிங்­கப்­பூர் தேசிய தேவா­ல­யச் சங்­கம், தாவோ­யி­சக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட சமய அமைப்­பு­கள் இதில் பங்­கேற்­கின்­றன.

கொவிட்-19 பர­வல் கால­கட்­டத்­தில் மேலும் அதி­க­மா­னோர் இணை­யத்தை நாடு­வ­தால் சமூக ஊட­கத்­தின் மூலம் பரப்­பப்­படும் பிரி­வி­னை­வா­தக் கருத்­து­களை எதிர்­கொள்­வ­தில் சவால்­கள் இருப்­ப­தாக கலா­சார, சமூக, இளை­யர்துறை துணை அமைச்­சர் ஆல்­வின் டான் தெரி­வித்­தார்.

"பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­த­வல்ல ஆற்­றல் மட்­டு­மின்றி, ஒன்­றி­ணைக்­க­வல்ல ஆற்­ற­லை­யும் சமூக ஊட­கங்­கள் கொண்­டு உள்­ளன. இணை­யத்­தில் நல்ல முறையிலான தாக்­கத்தை ஏற்­படுத்த எங்­க­ளது தொழில்­நுட்­பப் பங்­கா­ளி­கள் எங்­க­ளு­டன் செய­லாற்றி வரு­கின்­றன," என்று திரு டான் கூறி­னார்.

இன்ஸ்­ட­கி­ராம் பதிவுகள், டிக்­டாக் காணொளிகள் போன்றவை மூலமாக இளை­யர்­களுக்கு ஏற்ற வகையில் போதிப்பது எப்படி என்று இந்­தப் பயி­ல­ரங்­கு­களில் கற்றுத் தரப்படும்.

"பயி­லர­ங்­கில் கற்­ற­வற்­றின் மூலம் இளை­யர்­களை ஆக்­க­பூர்­வ­மான செயல்­களில் ஈடு­ப­டுத்த முயல்­வோம்," என்று 'ரோசஸ் அப் பீஸ்' சமூக நல்­லி­ணக்க அமைப்­பின் நிறு­வ­ன­ரும் முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முகம்­மது இர்­ஷாத் தெரி­வித்­தார்.

முதல் பயி­ல­ரங்­கில் பங்கேற்ற இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் ஊடக, தொடர்பு நிர்­வாகி திரு கவிந்­தி­ரன் தர்­ம­லிங்­கம், 34, சமூக ஊட­கங்­களை மேலும் ஆக்க­க­ர­மாகப் பயன்­ப­டுத்­து­வது குறித்துக் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறி­னார். "சிறுகாணொ­ளிகள் மூலம் மக்­க­ளின் கவ­னத்தை ஈர்ப்­பது எப்­படி என்­ப­தைக் கற்­றுக்­கொண்­டோம்," என்­றார் அவர்.

கடந்த ஏழு, எட்டு ஆண்­டு­களாக சமூக ஊட­கங்­களை இந்து அறக்­கட்­டளை வாரி­யம் பயன்­படுத்தி வரும் நிலை­யில், இது­போன்ற பயி­ல­ரங்­கு­கள் நிர்­வாக முறையை சூழ­லுக்கு ஏற்ப கையா­ளும் ஆற்­றலை மேற்­ப­டுத்த உதவு­கின்­றன என்று வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி த.ராஜ­சே­கர் குறிப்­பிட்­டார்.