இன்னமும் பயங்கரவாத மிரட்டல்; சமூக விழிப்புநிலை தொடரட்டும்

இன்னமும் பயங்கரவாத மிரட்டல்; சமூக விழிப்புநிலை தொடரட்டும்

4 mins read
00803db7-6809-4b9a-b520-525653e123af
-

முரசொலி

இப்போதைய கொவிட்-19 தொற்றைப் போல், சில ஆண்டுகளுக்கு முன் அல் காய்தா, ஜமா இஸ்லாமி, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அதிபயங்கரவாத அமைப்புகள் உலகையே அச்சுறுத்தி வந்தன,

கொரோனாவுக்கு முன்பு உலகம் எதிர்நோக்கிய மிகப்பெரிய மிரட்டலாக பயங்கரவாதமே இருந்து வந்தது. அமெரிக்காவில் 2001ல் அல் காய்தா நடத்திய பயங்கரமான தாக்குதலால் உலகமே அதிர்ச்சி சுனாமியில் சிக்கியது. அல் காய்தாவுடன் தொடர்பு உடைய ஜமா இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பு, அதற்கு அடுத்த ஆண்டு-2002ல் நமக்கு அருகாமையில் உள்ள பாலியில், கைவரிசை காட்டியதை இன்னமும் நாம் மறந்து இருக்க முடிது.

அல் காய்தா அமைப்பின் எடுபிடிகத் தோன்றிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மத்திய கிழக்கில் தளம்கொண்டு தனது பயங்கரவாதக் கரத்தை உலகம் முழுவதும் அப்போதைக்கு அப்போது நீட்டி ஏற்படுத்தி வந்த கொடூரமான உயிருடற் சேதங்களை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது.

அந்த அமைப்புகள் எல்லாம் இப்போது தலைவரை இழந்து தடுமாறுவதாக, செயல் இழந்துவிட்டதாக வெளியே தெரிகிறது. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இருப்பதாக அனுமானிக்க முடியவில்லை.

களத்தில் இறங்கி முன்பு போல் நேரடிக செயல் பட முடியவில்லை என்றாலும்கூட அவற்றிடம் காணப் படும் மீள்சக்தி-அதாவது மறுபடியும் தலைதூக்கக் கூடிய ஆற்றல்- குறைந்துவிட்டதாகத் தெரியவில்லை.

அவை, தங்களுக்கு மிகவும் வசதிக இணையத்தைத் திறம்பட பயன்படுத்திக்கொள்கின்றன.

பெரிதும் கவர்ச்சிகரமான போதனைகளுடன் குறிப்பாக இளையர்களைத் தங்கள் வலைக்குள் கொண்டு வருவதில் வசிய மருந்தைப் போல் செயல்படும் சக்தி அவற்றிடம் இன்னமும் இருக்கிறது.

அத்தகைய பயங்கரவாதக் குழுக்களின் இணையப் பிரசார பலமும் அந்த வலையில் அப்பாவி மக்களும் இளையர்களும் சிக்கும் நிலையும் தொடர்கிறது. இது சிங்கப்பூருக்கு பெரிய மிரட்டலாகவே இருந்து வருகிறது. சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை இதைத்தான் சில நாட்களுக்கு முன் வலியுறுத்திக் கூறியது. அந்தத் துறை, 'சிங்கப்பூர் பயங்கரவாத மிரட்டல் மதிப்பீட்டு அறிக்கையை'ச் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.

சிங்கப்பூருக்கு திட்டவட்டமான, உடனடி பயங்கரவாத மிரட்டல் இருப்பதாகத் தெரியவரும் உளவு சாட்சியம் எதுவும் இல்லை என்றாலும்கூட, ஐஎஸ் அமைப்பு தனது பயங்கரவாதக் கோட்பாட்டைக் கைவிட்டுவிடவில்லை என்பதையும் அது காலாகாலத்திற்கு நீடிக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்து இருப்பதையும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை சுட்டிக்காட்டி இருக்கிறது.

ஐஎஸ் அமைப்பு, உலக அளவில் மீள்திறனுடன் திகழ்கிறது; அதேபோல் அல் காய்தா முயற்சிகளை முடுக்கிவிட்டு வருகிறது; ஜமா இஸ்லாமி அமைப்பு இன்னமும் மிரட்டலாகவே இருந்துவருகிறது.

இவை எல்லாம் சிங்கப்பூருக்கு மட்டுமின்றி இந்த வட்டாரத்திற்கும் பாதகமாக இருக்கின்றன.

இவை ஒருபுறம் இருக்க, இதர வகை மிரட்டலும் தலைதூக்கி உள்ளது. அப்பாவி முஸ்லிம் மக்களைக் குறிவைக்கும் வலசாரி பயங்கரவாத அமைப்புகள் அண்மைய காலத்தில் தலை எடுத்து உள்ளதைக் காணமுடிகிறது.

தனிப்பட்டவர்கள் இணையம் மூலம் சுயமாக தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக்கொள்ளும் போக்கு இன்னமும் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படி சுயமாக தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக்கொள்வோர், திட்டமிட்டுச் செயல்படும் கும்பல்களில், அமைப்புகளில் சேராமல் தனித்து செயல்படுகிறார்கள்.

இவர்களைக் கைளுவது அதிகாரிகளுக்குப் பெரும் பாடாக இருக்கிறது. பயங்கரவாதக் கட்டமைப்பு என்றால் அவற்றில் ஊடுருவி அழித்துவிடலாம். ஆனால் வெளியே தெரிமல் பயங்கரவாதிகளாக மாறும் தனிப்பட்டவர்களை அடைளம் கண்டு, அவர்களை எட்டி, அவர்களைச் செயல் இழக்கச் செய்வது, இந்த இணைய யுகத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துவிட்டது.

சிங்கப்பூரில் 2019 முதல் பயங்கரவாதச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்களில் 10 பேரில் ஏறக்குறைய ஒன்பது பேர் சுயமாக தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக்கொண்ட தனிப்பட்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. இதுதான் சிங்கப்பூர் எதிர்நோக்கும் முதல் நிலை மிரட்டலாக உள்ளது.

உலகில் பல பகுதிகளிலும் இடம்பெறும் சம்பவங் களைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரால் இயலாது. வேறு இடங்களில் நிகழும் பயங்கரவாதச் சம்பவங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு அலைகள் சிங்கப்பூருக்குள் கரையேறாமல் தடுத்துக்கொள்வதும் சிரமம்.

அமெரிக்காவில் 2001ல் தாக்குதல் இடம்பெற்றதற்குப் பிறகு சமயம் தொடர்பான பயங்கரவாதப் போக்கும் வன்செயல்களும் அதிகரித்தன. ஆனாலும் சிங்கப்பூரில் இதுவரை பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் அரங்கேற்றப்படவில்லை. இந்தப் பாதுகாப்பான நிலைக்கு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் தொடர்புடைய இதர அமைப்புகளும் காதும்காதும் வைத்தாற்போல் செய்துவந்துள்ள, செய்துவரும் பணிகளே காரணம்.

இந்த அமைப்புகள் இரவும் பகலும் ஓய்வின்றிச் செயல்பட்டு பயங்கரவாதத்தில் இருந்து சிங்கப்பூரை திறம்பட பாதுகாத்து வருகின்றன.

சிங்கப்பூருக்குப் பயங்கரவாத மிரட்டல் இன்னமும் தொடரும் சூழலில், நாட்டை அத்தகைய அழிவு சக்திகளில் இருந்து பாதுகாக்கும் கடமையும் பொறுப்பும் சமூகத்திற்கும் இருக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பயங்கரவாத மிரட்டலைப் பொறுத்தவரை, சமூகம் எப்போதுமே விழிப்புடன், புரிந்துணர்வுடன் இருந்து வரவேண்டும். இதன் மூலம் அது பாதுகாப்பு அமைப்பு களுக்கு உறுதுணைக திகழ்ந்து வரவேண்டும்.

ருடைய நடத்தைவது சந்தேகத்திற்கு உரியதாக, வழக்கத்தில் இருந்து வேறுபட்டு இருப்பதாகத் தெரியவந்தால், அத்தகைய ஒருவர் கடைசியில் பயங்கரவாத பாதை பக்கம் திரும்பி நடக்கத் தொடங்கும் வாய்ப்பு அதிகம் என்பதைக் குடும்பத்தினர், நண்பர்கள், சகாக்கள் எல்லாருமே உணர வேண்டும், உணர்ந்துகொண்டு விழித்துக்கொள்ள வேண்டும்.

நமக்கு என்ன என்று இருந்துவிடாமல் எல்லாரும் பொறுப்புடன் தங்கள் பங்கை ஆற்றவேண்டும்.

அப்படிப்பட்ட தனிப்பட்டவர்களை நல்வழிப்படுத்த முயல வேண்டும். அவர்களைக் கண்காணித்து அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவேண்டும்.

மக்கள் இப்படி நடந்துகொண்டால் அத்தகைய தனிப்பட்டவர்கள் மட்டுமின்றி, நாடும் வீடும் சமூகமும் அழிவு சக்திகளைத் தவிர்த்துக்கொண்டு பாதுகாப்பு அரணுடன் ஆக்ககரமான பாதையில் தொடர்ந்து முன்னேறலாம்.