சமூக அளவில் 13 பேர் உட்பட சிங்கப்பூரில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகத்தில் தொற்று உறுதியான அந்த 13 பேரில் அறுவருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
எஞ்சிய எழுவர், முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களில் நால்வர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். எஞ்சிய மூவருக்கு கண்காணிப்பு பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த நால்வருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,530 ஆக உள்ளது.

