தீப்பற்றிய இந்திய பெருங்கடலில் மிதக்க விடப்பட்ட சரக்குக் கப்பல் சிங்கப்பூருக்கு நேற்று இழுத்துவரப்பட்டதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தீப்பற்றிய கப்பலின் தீயை இந்திய கடற்காவல் படையினர் அணைக்க முயன்றனர். இந்தியாவின் அந்தமான், நிக்கோபார் தீவிலுள்ள போர்ட் பிளேரிலிருந்து சுமார் 787 கிலோமீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
தீச்சம்பவத்தில் கப்பல் ஊழியர் ஒருவரை இன்னும் காணவில்லை. சிங்கப்பூரை நோக்கி அந்தக் கப்பல் கொழும்பிலிருந்து புறப்பட்டது.

