தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்தூக்கி தீவிபத்து எதிரொலி: 1,700 நடமாட்ட சாதனங்கள் வீசப்பட்டன

1 mins read
7d3f04cc-045c-45d2-950b-117280710f9b
-

உட்லண்ட்சில் அண்மையில் மின்தூக்கி ஒன்றில் நடந்த தீ விபத்துக்குப் பின்னர் இங்கு சுமார் 1,700 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் வீசப்பட்டுள்ளன. கடந்த 3ஆம் தேதி நடந்த தீவிபத்தில் ஆடவர் ஒருவர் மாண்டார்.

ஜூன் 4 முதல் ஜூன் 24 வரை, 1707 தனிப்பட்ட நடமாட்ட சாதனங்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கேஜிஎஸ் கழிவு நிர்வாக நிறுவனம் தெரிவித்தது.

வரும் 30ஆம் தேதி வரை அத்தகைய சாதனங்களைப் பெற்று இலசமாகக் கழிக்கவுள்ளது அந்நிறுவனம். யுஎல்2272 ரக சான்றிதழ் பெறாத நடமாட்ட சாதனங்களைப் பாதுகாப்பாக கழிக்கும்படி அது பயனாளர்களைக் கேட்டுக்கொண்டது. கடந்த ஆண்டு ஜூலையில், அச்சான்றிதழ் பெறாத அனைத்து சாதனங்களும் பதிவு நீக்கப்பட்டது. அவற்றைப் பொது இடங்களில் பயன்படுத்த அனுமதி இல்லை.