புக்­கிட் மேரா வியூ சந்தை: சில கடை­களே நேற்று திறப்பு

புக்­கிட் மேரா வியூ சந்தை: சில கடை­களே நேற்று திறப்பு

2 mins read
33561fb6-65a9-4a68-bdb3-7a96ba840868
நேற்று காலையில் ஆள் அரவமற்று காணப்பட்ட புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவங்காடி நிலையம். படம்: பெரித்தா ஹரியான் -

சிங்­கப்­பூ­ரில் ஆகப் பெரிய கிரு­மித்­தொற்று குழு­ம­மாக இருந்த புக்­கிட் மேரா வியூ சந்தை இரண்டு வார­மாக மூடப்­பட்­டி­ருந்த நிலை­யில் நேற்று மீண்­டும் திறக்க அனு­ம­திக்­கப்பட்டது.

எனி­னும், சில கடை­களே மீண்­டும் திறந்­தி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ேநற்று செய்­தி­யா­ளர்­கள் அங்கு சென்­ற­போது அங்­கி­ருக்­கும் 182 கடை­களில் 10க்கும் குறை­வா­ன­வையே திறந்­தி­ருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்டது. அங்­கி­ருக்­கும் கடை உரி­மை­யார்­களில் சிலர் இரண்டு வார தனி­மைப்­ப­டுத்­த­லுக்­குப் பின் தங்­கள் கடை­களை சுத்­தம் செய்­ய­வும் அங்­கி­ருக்­கும் சரக்கை எடுத்­துச் செல்­வ­தற்கும் மட்­டுமே வந்­த­தாக கூறப்­ப­டு­கிறது.

சந்­தை­யில் மக்­கள் வரு­கை­யும் குறைந்­தி­ருந்­த­தா­கச் சொல்­லப்­படும் நிலை­யில், அங்கு சென்ற சில­ரி­டம் தாங்­கள் இன்­ன­மும் பழை­ய­படி வர்த்­த­கத்தை தொடங்­க­வில்லை என்று வந்­த­வர்­க­ளி­டம் கடைக்­­கா­ரர்­கள் கூறி­ய­தாக தெரி­கிறது.

புக்­கிட் மேரா வியூ சந்­தை­யில் கோழி இறைச்சி விற்­ப­னை­யில் தமது கண­வ­ரு­டன் ஈடு­பட்டு வந்­துள்ள திரு­வாட்டி லின்­டா­வதி, 47, நேற்று மீண்­டும் கடைக்கு வந்து தமது வர்த்­த­கத்தை தொடங்­கி­ய­வர்­க­ளுள் ஒரு­வர்.

தங்­கள் குடும்ப உறுப்­பி­னர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் அல்­லது போட்­டுக் கொள்­ள­வி­ருக்­கின்­ற­னர் என்­ப­தால் கிரு­மித்­தொற்று குறித்து தாம் அதி­கம் கவலை கொள்­ள­வில்லை என அவர் விளக்­கி­னார்.

இவ­ரது ஐந்து குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் தனி­மைப்­ப­டுத்­திக் ெகாள்­ளும் காலம் சனிக்­கி­ழ­மை­யு­டன் முடிந்து விட்­டது. கடையை ஏன் சீக்­கி­ர­மாக திறந்­து­விட்­டீர்­கள் என்ற கேள்­விக்கு தமக்கு வேறு வழி­யில்லை என்­றும் இரண்டு வாரங்­க­ளாக வரு­மா­னம் ஏது­மின்றி தம் குடும்­பம் சிர­மத்­துக்கு உள்­ளா­னது என்­றும் அவர் விவ­ரித்­தார்.

எனி­னும், மீண்­டும் வர்த்­த­கம் தொடங்க உள்­ள­தால் இவர் வருங்­கா­லம் குறித்து நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளார்.

இங்கு வரும் பல­ரின் நட­ வ­டிக்­கை­கள் கிரு­மித்ெ­தாற்று அபா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக 51 வயது வழக்­க­றி­ஞர் ஹோ வூன் சான் தெரி­வித்­தார்.

இங்கு பலர் பல மணி நேரம் புகை­பி­டித்­தும் பானம் அருந்­திக் கொண்­டும் இருப்­பதையும் பலர் முகக்­க­வ­சங்­களை முறைப்­படி அணி­யா­த­தையும் தாம் பார்த்­த­தாகக் கூறினார்.

புக்­கிட் மேரா வியூ சந்­தை­யில் சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி கிரு­மித்­தொற்­றுக்கு உட்­பட்ட கடை­க­ளின் எண்­ணிக்கை 89. இதில் இங்கு முதல் கிரு­மித்­தொற்று சம்­ப­வம் ஜூன் 9ஆம் தேதி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர் 74 வயது சிங்­கப்­பூர் ஆட­வர். இவர் இங்­கி­ருக்­கும் பல்­பொ­ருள் கடை­யில் வேலை பார்ப்­ப­வர். இந்த ஈரச்­சந்தை முத­லில் இம்­மா­தம் 13ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி­வரை சுத்தம் செய்­யப்­ப­டு­வ­தற்­காக மூடப்­பட்­டது. பின்­னர், மேலும் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் ஏற்­ப­டவே ஜூன் 26ஆம் தேதி­வரை சந்தை மூடப்­பட்­டது.