பிரித்தம்: இனவாதம் பற்றிய லாரன்ஸ் வோங்கின் உரை நல்ல அறிகுறி; எனினும் சில கொள்கைகளை மறுஆய்வு செய்யலாம்

பிரித்தம்: இனவாதம் பற்றிய லாரன்ஸ் வோங்கின் உரை நல்ல அறிகுறி; எனினும் சில கொள்கைகளை மறுஆய்வு செய்யலாம்

2 mins read
0bfbf083-7638-45ec-a9a7-1ab22c56ba3d
-

இனம் பற்­றி­யும் இன­வா­தம் பற்­றி­யும் நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் அண்­மை­யில் ஆற்­றிய உரை சரி­யான அறி­கு­றி­யைக் காட்­டு­வ­தா­க­வும் வேறு­பா­டு­க­ளைப் புரிந்­து­கொள்ள மக்­கள் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் கற்­றுத் தந்து உதவ வேண்­டும் என்று அவர் விடுத்த அழைப்பு அர­சி­ய­லுக்­கு ­அற்­பாட்­டுச் செல்­லும் முக்­கி­ய­மான ஒன்று என­வும் எதிர்த்­த­ரப்­புத் தலை­வர் பிரித்­தம் சிங் கூறி­யுள்­ளார்.

ஆனால் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கப் பேட்­டை­களில் உள்ள இன­வா­ரி­யாக ஒதுக்­கீடு செய்­யும் இன ஒருங்­கி­ணைப்­புப் கொள்கை, நாடா­ளு­மன்­றக் குழுத்­தொ­குதி போன்ற கொள்­கை­கள் மறு­ஆய்வு செய்­யக்­கூ­டி­யவை என்று அவர் கூறி­னார்.

இனம் பற்றி கொள்கை ஆய்­வுக் கழ­க­மும் எஸ். ராஜ­ரத்­தி­னம் ஆய்­வுக் கழ­க­மும் கடந்த வெள்­ளிக்கிழமை ஏற்­பாடு செய்த கருத்­த­ரங்­கில் திரு வோங் ஆற்­றிய உரை­யைப் பற்றி திரு பிரித்­தம் அவ்­வாறு கருத்­து­ரைத்­தார்.

கடந்த சனிக்­கி­ழமை அது­பற்றி தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்ட திரு பிரித்­தம், மக்­கள் செயல் கட்­சி­யின் சில நீண்­ட­நாள் கொள்­கை­களில் எல்லாருக்கும் இணக்­கம் இல்லை என்று திரு வோங் தமது உரை­யில் ஏற்­றுக்­கொண்­ட­தைக் குறிப்­பி­டத்­தக்­கது என்று திரு பிரித்தம் வரு­ணித்­தார்.

இன ஒருங்­கி­ணைப்புக் கொள்கை பற்றி பாட்­டாளி கட்­சிக்கு நெரு­டல் இருப்­ப­தா­கவும் அவர் சொன்­னார். அக்­கொள்கை பற்றி தங்­க­ளி­டம் கருத்­து­ரைத்த சிறு­பான்மை இனத்­த­வர்­கள் விலை­யைக் குறைத்து வீட்டை விற்­கும் நிலையில் தாங்கள் உள்ளதாகக் கூறி­னர் என்றார் அவர்.

அக்­கொள்­கை­யால் சிறு­பான்மை இனத்­த­வ­ர் நேர­டி­யான, உண்­மை­யான நிதிச் சுமையை எதிர்­நோக்­கு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். அத்­து­டன், தேசிய பள்­ளி­கள், தேசிய சேவை உள்­ளிட்ட கொள்­கை­களில் இனம் வகிக்­கும் பங்கு பற்­றி­யும் திரு பிரித்­தம் சுட்­டிக்­காட்­டி­னார்.

நாடா­ளு­மன்­றக் குழுத் தொகு­திக் கொள்கை பற்றி திரு வோங் அளித்த விளக்­கம் பற்றிக் குறிப்­பிட்ட அவர், சிங்­கப்­பூ­ரர்­களில் பல­ரும் இன்று இன­ரீ­தி­யாக வாக்­க­ளிப்­பார்­களா என்று கேள்வி எழுப்­பு­வது பொருத்தமாக இருக்கும் என்­றார்.