கடல் உயிரினங்களுக்கு பாதிப்பின்றி நடக்கும்படி ஊக்குவிப்பு

கடல் உயிரினங்களுக்கு பாதிப்பின்றி நடக்கும்படி ஊக்குவிப்பு

1 mins read
9a7b3a49-2fd4-4cb9-adc7-15ec72564be4
கடல் உயிரினங்களைத் தொடுவதால் அவற்றுக்குத் தேவையில்லா பாதிப்பு ஏற்படலாம். மென்மையான உயிரினங்கள் காயமடையக்கூடும். அதனால் அவற்றைத் தொடாமல் பார்த்து ரசித்தனர் சாங்கி கடற்கரைக்கு நேற்று சென்ற பொதுமக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சென்ற வார­யி­றுதி அதி­கா­லை­யில் சாங்கி கடற்­கரை, பாசிர் ரிஸ் பூங்கா போன்ற இடங்­களில் கடல் மட்­டம் குறைந்­தி­ருந்த வேளை­யில் அங்கு ஒதுங்­கி­யி­ருந்த கடல் உயி­ரி­னங்­க­ளைக் காண பொது­மக்­கள் பலர் கூடி­னர்.

அப்­போது கடல் உயி­ரி­னங்­க­ளுக்கு பாதிப்­பில்­லா­மல் அவற்­றைப் பார்த்து மகிழ்­வ­தற்கு அங்­கு சென்ற பொது­மக்­க­ளுக்கு தேசிய பூங்­காக்­கள் கழ­கத்­தின் ஊழி­யர்­களும் தொண்­டூ­ழி­யர்­களும் வழி­காட்­டி­னர்.

அரிய வகை உயி­ரி­ன­மான கேக் கடல் விண்­மீ­னைப் பார்த்­துக் கொண்­டி­ருந்த ஒரு குடும்­பத்­துக்கு வழி­காட்­டி­னார் தொண்­டு­ழி­யர்­களில் ஒரு­வ­ரான 44 வயது திரு­வாட்டி டோரீன் ஃபூ. உயி­ரி­னங்­க­ளைப் பார்த்­தால் போதும், தொட­வேண்­டாம் என்று அவர் அறி­வு­றுத்­தி­னார்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி கடல் மட்­டம் குறைந்­தி­ருந்­த­போது, இதே போல பல­ரும் கடல் உயி­ரி­னங்­க­ளைக் காண சாங்கி கடற் ­க­ரை­யில் குடும்­பங்­க­ளா­கக் கூடி­ய­தைக் காட்­டும் காணொ­ளி­களும் புகைப்­ப­டங்­களும் சமூக ஊட­கங்­களில் பர­வின.

ஆனால் அவர்­கள், வாளி­க­ளை­யும் குற­டு­க­ளை­யும் மண்­வா­ரி­க­ளை­யும் கொண்டு கடல் உயி­ரி­னங்­க­ளைத் தொட்­ட­தும் எடுத்­துச் சென்­ற­தும் காணப்­பட்­டது.

ஆனால் நேற்­றைய நிலை மேம்­பட்டு இருந்­தது.

நேற்று சாங்கி கடற்­க­ரைக்­குச் சென்ற தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, கிரு­மிப் ­ப­ர­வல் சூழ­லில் பொது­மக்­கள் தீவின் பல பகு­தி­க­ளுக்­குச் சென்று வருவது தெரியும் என்றார். ஆனால் சில நடத்தைகளால் சிங்கப்பூரின் கடல் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்றார் அவர். அதனால் பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்த இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.