சமூகத்தில் 12 பேருக்கு தொற்று

சமூகத்தில் 12 பேருக்கு தொற்று

1 mins read
ddfbc185-654b-4a9d-8dce-5dc7abc28120
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 14 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறு­தி­யாகி உள்­ளது. சுகா­தார அமைச்சு நேற்று அத­னைத் தெரி­வித்­தது.

அவர்­களில் 12 பேர் சமூ­கத்­தில் இருப்­ப­வர்­கள். இரண்டு பேர் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள்.

சமூ­கத் தொற்­று­களில் ஒரு­வ­ருக்கு, தொற்று ஏற்­பட்­டுள்ள வேறு எவ­ரு­ட­னும் தொடர்பு இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

கொவிட்-19 தொற்­றி­னால் ஏற்­பட்ட மருத்­து­வப் பிரச்­சி­னை­க­ளின் கார­ண­மாக 84 வயது மாது உயிர் இழந்­தார் என்று சுகா­தார அமைச்சு கடந்த சனிக்­கி­ழமை இரவு தெரி­வித்­தது.

புக்­­கிட் மேரா வியூ புளோக்­கு­கள் 115, 116க்கு சென்­ற­வர்­க­ளுக்கு சுகா­தார அமைச்சு மேற்­கொண்ட கண்­கா­ணிப்­புச் சோத­னை­களில் அவ­ருக்கு கடந்த 15ஆம் தேதி பரி­சோ­தனை செய்­யப்­பட்­டு தொற்று உறு­தி­யா­னது.

அவ­ருக்கு தடுப்­பூசி செலுத்­தப் பட­வில்லை. அத்­து­டன், புற்­று­நோய், ரத்­த அழுத்தம் ஆகிய பிரச்­சி­னை­கள் அவ­ருக்கு இருந்­தன.