பள்ளிவாசல்களுக்கு சென்ற 96 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டவர்கள்

1 mins read
341e3626-f134-4ec3-9125-7c7a58b03011
முஜாஹிடின் பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்ற ஒருவரின் தடுப்பூசி விவரங்களைப் பள்ளிவாசல் அதிகாரி சரிபார்க்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அதிகமானவர்களை அனுமதிக்கும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) சோதனை திட்டத்தின்படி நான்கு பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டவர்களில் 96 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 11 பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் நிகழ்ச்சிக்கு முந்திய கொவிட்-19 பரிசோதனையை முடித்துள்ள சான்றைக் காட்டினார்கள் என்றும் முயிஸ் நேற்று கூறியது.

தொழுகைக்குப் பதிவு செய்து கொண்டவர்களில் சிறிய எண்ணிக்கையினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதாலும் நிகழ்ச்சிக்கு முந்திய கொவிட்-19 பரிசோதனைக்குச் செல்லவில்லை என்பதாலும் அவர்கள் பள்ளிவாசல்களுக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட 14 நாட்களுக்குப் பிறகுதான் ஒருவர் முழுமையாக தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர் என்று கருதப்படுவார்.

பாசிர் ரிஸ்சில் உள்ள அல்-இஸ்டிக்ஃபார், புக்கிட் பாத்தோக்கில் உள்ள அல்-ரவ்தா, அட்மிரல்டி லேனில் உள்ள அஸ்சியாஃபா, ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள முஜாஹிடின் ஆகியவையே சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் முழு அனுமதி சோதனைத் திட்டத்தில் பங்கேற்ற நான்கு பள்ளிவாசல்கள்.