ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரா­க புகார் செய்ய புதிய தளம்

1 mins read
66461974-7874-4efb-a67a-912e60a5b5ed
-

தனது ஊழி­யர்­கள் ஏதா­வது தவறு செய்­தால் அவர்­க­ளுக்கு எதி­ராக தைரி­ய­மா­கப் புகார் செய்ய புதிய தளம் ஒன்றை அமைக்க நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி திட்­ட­மிட்­டுள்­ளது. அதற்­கான சேவை வழங்­கு­நரை அது தேடி வரு­கிறது.

ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரா­கப் புகார் செய்­தால் அதற்­கான பின்­வி­ளை­வு­களை அனு­ப­விக்க வேண்­டும் என்ற அச்­சம் ஏற்­ப­டா­மல் இருக்க இந்­தத் தளம் அமைக்­கப்­ப­டு­கிறது.

இதன்­மூ­லம் ஊழி­யர்­க­ளுக்கு எதி­ராக சக ஊழி­யர்­கள், மாண­வர்­கள், பெற்­றோர், பொது­மக்­கள் எவ்­வித தயக்­க­மும் இன்றி புகார் செய்­ய­லாம்.

ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரா­கப் புகார்­க­ளைப் பெற tellnp@np.edu.sg எனும் மின்­னஞ்­சல் முக­வ­ரியை நீன் ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி தற்­போது பயன்­ப­டுத்­து­கிறது.

புதிய அணு­கு­முறை நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­தும் தற்­போது நடப்­பில் இருக்­கும் முறை கை

வி­டப்­ப­டுமா என்­பது குறித்து தக­வல் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

முறை­யற்ற நடத்தை கொண்ட ஊழி­யர்­கள், மற்­ற­வர்­க­ளின் பாது­காப்­புக்கு ஆபத்து விளை­விக்­கும் ஊழி­யர்­கள் போன்­றோ­ருக்கு எதி­ரா­கப் புதிய திட்­டம் வழி புகார் செய்­ய­லாம்.