புதிய உணவு பணிப்பு (ஆர்டர் எடுக்கும்) இயந்திர மனிதச் சேவையை பாய லேபார் குவாட்டர் கடைத்தொகுதியில் கிராப் நிறுவனம் அறிமுப்படுத்தியுள்ளது.
இந்த இயந்திர மனிதனுக்கு A.H.B.O.I. என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதிய இயந்திர மனிதன் வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பும் உணவைப் பதிவு செய்துகொண்டு பிறகு கிராப் உணவு விநியோக ஓட்டுநர்களிடம் ஒப்படைக்கும்.
இந்தச் சேவை கடைத்தொகுதியில் பி2 தளத்தில் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற சேவை வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இயந்திர மனிதன் பணிப்புகளைச் சேகரிப்பதால் உணவு விநியோக ஓட்டுநர்களின் வேலைப் பளு குறைவதாகத் தெரிவிக்கப்பட்டது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

