'இணை­யக் கணக்­கு­க­ளுக்கு எளி­தில் ஊகிக்க முடி­யாத மறைச்­சொல் அவ­சி­யம்'

3 mins read
3c4c3d81-7aec-4915-8fdf-6bae76668779
-

சிங்­கப்­பூ­ரில் உள்ள பெரும்­பா­லான பய­னா­ளர்­கள், கிட்­டத்­தட்ட 10ல் எட்­டுப் பேர், தங்­கள் இணைய வங்­கிக் கணக்­கு­க­ளைப் பாது­காக்க இரட்டை மறைச்­சொல் முறையை (2FA) அங்­கீ­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். எனி­னும், வாட்ஸ்­அப், இணை­யக் கடை­

க­ளில் பொருள் வாங்­கு­வது, தனிப்­பட்ட மின்­னஞ்­சல்­கள், சமூக ஊட­கங்­கள் போன்ற ஏனைய இணைய கணக்­கு­க­ளுக்கு இரு­வ­ரில் ஒரு­வர் மட்­டுமே இரட்டை மறைச்­சொல் முறையைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர் என்று சிங்­கப்­பூர் இணை­யப்­பா­து­காப்பு அமைப்பு (சிஎஸ்ஏ)நேற்று வெளி­யிட்ட ஆய்வு முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரி­லுள்ள பல பய­னா­ளர்­கள் தற்­போது மிக­வும் சிக்­க­லான மறைச்­சொற்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி­னர். ஆனால் பல­ரும் இன்­னும் எளிதில் ஊகிக்க முடியாத மறைச்­சொல் என்ன என்­பதை அடை­யா­ளம் காண முடி­ய­வில்லை எனக் கூறி­னர்.

தனிப்­பட்ட மின்­னஞ்­சல் கணக்­கு­க­ளைப் பொறுத்­த­வரை ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 51 விழுக்­காட்­டி­னர் கடந்த ஆண்டு இரட்டை மறைச்­சொல் முறையைப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறி­னர். இது 2019ல் 44 விழுக்­கா­டாக இருந்­தது. சமூக ஊட­கங்­க­ளைப் பொறுத்­த­வரை, 47 விழுக்­காட்­டி­னர் கடந்த ஆண்டு அவ்­வாறு செய்­த­னர். இந்த விகிதம் 2019இன் 42 விழுக்­காட்டை விடச் சிறந்­தது.

கடந்த ஆண்டு டிசம்­ப­ரில் இணை­யத்­தில் நடத்­தப்­பட்ட இந்த இணையப் பாது­காப்பு விழிப்­பு­ணர்வு ஆய்­வில் ஏறக்­கு­றைய 1,000 சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் பங்­கேற்­ற­னர்.

மறைச்­சொற்­கள் திரு­டப்­பட்­டால் அல்­லது ஊகிக்­கப்­பட்­டால், மோச­டிப் பேர்­வ­ழி­கள் கணக்­கு­களை ஊடு­ரு­வ­தைக் கடி­ன­மாக்­கு­வ­தற்கு இரட்டை மறைச்­சொல் முறை­யைச் செயல்­ப­டுத்­து­மாறு இணையப் பாது­காப்பு நிபு­ணர்­களும் அர­சாங்­க­மும் நீண்­ட­கா­ல­மாக பய­னா­ள­ருக்­கும் அமைப்­பு­க­ளுக்­கும் அறி­வு­றுத்­தி­யுள்­ளன.

இந்த மாதத் தொடக்­கத்­தில், மோசடி செய்­ப­வர்­கள் மக்­க­ளின் வாட்ஸ்­அப் கணக்­கு­களை ஊடு­ருவ குரல் அஞ்­சல் முறை­யைப் பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும், இந்த கணக்­கு­களை தங்­கள் நண்­பர்­களை மோசடி செய்ய பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும் போலிஸ் எச்­ச­ரித்­தது. பய­னா­ளர்­கள் தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்ள ஒரு வழி இரட்டை மறைச்­சொல்­லை உப­யோ­கிப்­பது.

"தங்­க­ளது கணக்­கு­கள் அனைத்­தும் ஒருநாள் ஊடு­ரு­வப்­படும், மேலும் தங்­க­ளின் தனிப்­பட்ட தர­வு­கள் அனைத்­தும் வெளி­யில் கசி­யும் அபா­யம் உள்­ளது" என்ற அனு­மா­னத்­தில் மக்­கள் செயல்­பட வேண்­டும் என்று கூறி­னார் இணையப் பாது­காப்பு நிறு­வ­ன­மான 'ட்ரெண்ட் மைக்ரோ'வின் சிங்­கப்­பூ­ருக்­கான மேலா­ளர் திரு டேவிட் இங்.

அத்­த­கைய மன­நி­லை­யில், மக்­கள் இன்­னும் பாது­காப்­பான அணுகு ­மு­றையை எடுப்­பார்­கள்.

இரட்டை மறைச்­சொல் முறையை எப்­போது பயன்­ப­டுத்­துவது என்­ப­தைத் தீர்­மா­னிக்க பய­னா­ளர்­கள் தங்­கள் இணை­யக் கணக்­கு­களை, பொது, உள்­சுற்­றுக்­கா­னது, ரக­சி­ய­மா­னது என மூன்று வகை­யா­கப் பிரித்து வைத்­துக்­கொள்­ள­லாம் என்று அவர் கூறி­னார்.

உள்­சுற்­றுக்­கான தர­வு­கள் குறைந்­த­பட்­சம் சிக்­க­லான மறைச்­சொற்­க­ளால் பாது­காக்­கப்­பட வேண்­டும். ஆனால் அனைத்து ரக­சிய தர­வு­களும் இரட்டை மறைச்­சொல் போன்ற பல அடுக்கு பாதுகாப்பைக் கொண்டு இருக்க வேண்­டும் என்று திரு இங் கூறி­னார்.

சில இணைய நடை­மு­றை­களும் ஆபத்­து­கள் குறித்த விழிப்­பு­ணர்வு மேம்­பட்­டி­ருந்­தா­லும், இன்­னும் சிக்­கல்­கள் உள்­ளன என்­பதை ஆய்வு காட்­டு­கிறது.

மக்­கள் இணை­யத் தாக்­கு­தல்­

க­ளைப் பற்றி கவ­லைப்­பட்­டா­லும், தங்­கள் கணக்­கு­கள் ஊடு­ரு­வப்­ப­ட­லாம் என்று நினைப்­பது மிகக் குறைவு என ஆய்வு சுட்­டி­யது.

எனி­னும், அதி­க­மான மக்­கள் மிக­வும் சிக்­க­லான மறைச்­சொல்­லைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர், கடந்த ஆண்டு 88 விழுக்­காட்­டி­னர் அவ்­வாறு செய்­த­னர். அதற்கு முந்­திய ஆண்­டில் 83 விழுக்­காட்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது அதி­கம்.

பல­வீ­ன­மான மறைச்­சொற்­களை எளி­தில் ஊடு­ருவ முடி­யும் என்­றா­லும், "இன்­னும் சில காலத்­தில், மறைச்­சொற்­கள் வழக்­கற்­றுப்போய்­வி­டும், குறிப்­பாக விற்­ப­னை­யா­ளர்­கள் தங்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் பாது­காக்க அடுத்த தலை­முறை தொழில்­நுட்­பத்­தில் தொடர்ந்து முத­லீடு செய்­வ­தால்," என்­றார் திரு இங்.

தங்­கள் கைபேசி சாத­னங்­களில் வைரஸ் எதிர்ப்பு செய­லி­கள், இணைய வடி­கட்­டு­தல் செய­லி­கள் போன்ற இணை­யப் பாது­காப்பு பயன்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தா­த­தால் ஏற்­படும் அபா­யங்­களை 78 விழுக்­காட்­டி­னர் புரிந்­து­கொண்­டுள்­ள­தாக சிஎஸ்ஏ கண்­ட­றிந்­துள்­ளது.

ஆனால் 39 விழுக்­காட்­டி­னரே கடந்த ஆண்டு இவற்றை கைபே­சி­யில் சேர்த்­துள்­ள­தா­கக் கூறி­னர். இது முந்­தைய ஆண்­டின் 47 விழுக்­காட்டை விடக் குறைவு.

மக்­கள் தங்­கள் கைபே­சிகளில் கூடு­த­லான ரக­சிய தர­வு­கள் உள்­ளதை உணர்­வ­தில்லை. கைபே­சி­யை­விட கணி­னி­க­ளுக்கே ஆன்டி-வைரஸ் மென்­பொ­ரு­ளைப் பயன்­

ப­டுத்­து­கின்­ற­னர். எந்­தத் தளம் என்ற வேறு­பா­டு­க­ளின்றி, அச்­சு­றுத்­தல்­கள் ஒரே மாதி­ரி­யாக உள்­ளதை திரு இங் சுட்­டி­னர்.

தங்­கள் கைபேசி சாத­னங்­கள் ஒரு­நாள் ஊடு­ரு­வப்­ப­ட­லாம் என்­பதை மக்­கள் உணர வேண்­டும் என்­றார் அவர்.