'இனவாதச் செயல்களை சகித்துக்கொள்ளக் கூடாது' 'இனவாதச் செயலில் பிறர் ஈடுபடுவதைத் தடுக்கும் அளவுக்குத் தண்டனை தேவை'

'இனவாதச் செயல்களை சகித்துக்கொள்ளக் கூடாது' 'இனவாதச் செயலில் பிறர் ஈடுபடுவதைத் தடுக்கும் அளவுக்குத் தண்டனை தேவை'

2 mins read
be435561-f3d8-454b-ba6d-c3d9819ec192
-

இன­வாதத் தாக்­கு­தல்­களில் இடம்­பெ­று­வோரைத் தண்­டிப்­ப­தில் சகிப்­புத்­தன்­மை­யற்ற அணு­கு­முறை தொடர வேண்­டும். மற்­ற­வர்­களும் அத்­த­கைய காரி­யங்­களில் ஈடு­ப­டா­மல் இருக்­கும் வகை­யில் அவர்­களுக்குத் தொடர்ந்து தண்­டனை கிடைக்க வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் இன­வா­தச் செயல்­களை ஒடுக்­கு­வ­தில் இந்த அணுகு­முறை முக்­கி­யம் என்று கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

இன­வா­தச் செயல்­க­ளைச் செய்­யும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு அடிக்­கடி சிறைத்­தண்­டனை கொடுக்­கப்­ப­டு­கிறது. மற்­ற­வர்­களும் அல்­லது அதே குற்­ற­வா­ளி­களும் அத்­த­கைய செயல்­களில் மீண்டும் ஈடு­ப­டு­வதைத் தடுக்­கும் நோக்­கத்­து­டன் கூடிய இதர தண்­ட­னை­களும் கொடுக்­கப்­ப­டு­கின்­றன.

அத்­த­கைய தண்­ட­னை­களை விதிக்­கும் அணு­கு­மு­றையை தொடர்ந்து தான் ஆத­ரிக்­கப்­போ­வ­தாக தலை­மைச் சட்ட அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

நம் சமூ­கத்­திற்­கும் சமய நல்­லி­ணக்­கத்­திற்­கும் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களை அத்­த­கைய தண்­டனை மூலம் தடுக்க முடி­யும் என்று அந்த அலு­வ­ல­கம் குறிப்­பிட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

பல இன குழுக்­க­ளுக்கு இடை­யில் கசப்புணர்வை ஏற்­படுத்­தும் வகை­யில் வேண்­டு­மென்றே செய்­யப்­படும் செயல்­கள் சகித்­துக்­கொள்­ளப்படமாட்டா.

அத்­த­கைய காரி­யங்­களில் ஈடு­படு­வோ­ருக்கு எதி­ராக சட்­டப்­படி உறு­தி­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும் என்று அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

பேருந்து ஒன்­றில் ஒரு மாதை நோக்கி மற்றொரு மாது ஏழு நிமிடங்கள் இன­வாத ரீதி­யில் வசை­பா­டிய சம்­ப­வம் அண்­மை­யில் நிகழ்ந்தது.

அந்­தச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளி­ மாதுக்கு நான்கு வாரம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அந்­தத் தீர்ப்பை அளித்த நீதி­பதி, இத்­த­கைய குற்­றச்­செ­யல்­களுக்கு நம் சமூ­கத்­தில் அறவே இடம் கிடை­யாது என்று குறிப்­பிட்டு இருந்­தார்.

இதன் தொடர்பில் தலைமைச் சட்ட அலு­வ­ல­கம் கருத்து கூறியது.

இத­னி­டையே, இதுபற்றி கருத்­து­ரைத்த குற்­ற­வி­யல் வழக்­க­றி­ஞர்­கள், பொது­வாக சிங்­கப்­பூ­ரில் உள்ள நீதி­மன்­றங்­கள் இன­வாதக் குற்­றச்­செ­யல்­களைச் சகித்­துக்­கொள்­வ­தில்லை என்று குறிப்­பிட்­ட­னர்.

ஒரு­வ­ரின் இனம், தேசி­யம் அல்­லது சம­யத்­திற்கு எதி­ராக தெரி­விக்­கப்­படும் அவ­தூ­றான கருத்­து­கள் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­களில் குற்­ற­வா­ளிக்குச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டு­கிறது என்­ப­தை­யும் அவர்­கள் சுட்­டி­னர்.

ஒரு­வ­ரின் சமய, இன உணர்வு­களைப் புண்­ப­டுத்­தும் நோக்­கத்­துடன் வேண்­டு­மென்றே அவர்­கள் காதில் விழும்­படி பேசு­வது, சைகை காட்­டு­வது போன்ற குற்­றச்­செ­யல்­களுக்கு மூன்­றாண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை, அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்க முடி­யும்.

இனக் குழுக்­க­ளுக்கு இடை­யில் விரோதப் போக்கை வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்­து­வோருக்கு, நல்­லி­ணக்­கத்­திற்குப் பாத­க­மான செயல்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு இதேபோன்ற தண்­டனை விதிக்க முடி­யும்.

சிங்­கப்­பூ­ரில் பல இனங்­க­ளுக்கு இடை­யில் கசப்புணர்வையும் வெறுப்­பு­ணர்ச்­சி­யை­யும் உண்டு பண்­ணும் வகை­யில் பேசு­வது, கருத்­து­களை வெளி­யி­டு­வது கீழ­றுப்­புச் சட்­டத்­தின் கீழ் ஒரு குற்­ற­மா­கும்.

இத்­த­கைய குற்­றத்தை முதல் முறை புரி­வோ­ருக்கு $5,000 அப­ரா­தம், மூன்­றாண்டு வரை சிறை அல்­லது இரண்­டை­யும் தண்­ட­னை­யாக விதிக்க முடி­யும்.