உள்ளூரில் ஐவர் உட்பட நேற்று புதிதாகப் பத்துப் பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதை அடுத்து, சிங்கப்பூரில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,563 ஆனது. சமூகத்தில் பாதிக்கப் பட்ட அந்த ஐவரும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையோர். அவர்களில் நால்வர் ஏற்கெனவே தனிமைப் படுத்தப்பட்டுவிட்டனர். எஞ்சிய ஒருவர்க்குக் கண்காணிப்பு பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது. வெளிநாட்டில் இருந்து வந்த ஐவர்க்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. அவர்களில் நால்வர்க்கு சிங்கப்பூர் வந்து இறங்கியதும் தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றியபோது எஞ்சிய ஒருவர்க்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
உள்ளூரில் ஐவர் உட்பட பத்துப் பேருக்குத் தொற்று
1 mins read
-

