'வாழ்நாள் முழுதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே தொற்றுநோயிலிருந்து காத்துக்கொள்ள சிக்கன வழி'

'வாழ்நாள் முழுதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே தொற்றுநோயிலிருந்து காத்துக்கொள்ள சிக்கன வழி'

2 mins read
b715f317-8786-46c3-a0a5-23a27f0f3142
-

குழந்­தைப் பரு­வத்­திற்­குப் பின் வாழ்­வின் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது, தொற்­று­நோய்­களில் இருந்து பாதுகாக்­கும் சிக்­க­ன­மான வழி­முறை­களில் ஒன்று என்று ஆய்வு முடிவு தெரி­விக்­கிறது.

வயது ஏற ஏற ஒரு­வ­ரின் நோய் எ­திர்ப்­பாற்­றல் குறைந்து, சளிக்­காய்ச்­சல், நுரை­யீ­ரல் அழற்சி போன்ற தொற்­று­க­ளால் எளி­தில் பாதிக்­கப்­படும் வாய்ப்பு அதி­க­ரிக்­கலாம். இது மற்ற உடல்­ந­லப் பிரச்­சி­னை­க­ளுக்­கும் வித்­தி­ட­லாம்.

நோய்த் தடுப்­பில் தடுப்­பூசி செயல்­தி­றன்­மிக்­க­தாக இருந்து வந்­தா­லும், உல­கின் பிற பகு­தி­களை ஒப்­பு­நோக்க, தென்­கி­ழக்­கா­சி­யா­வில் வாழ்­நாளின் ஒவ்வொரு கட்டத்திலும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது குறை­வா­கவே உள்ளது.

உலக சுகா­தார நிறு­வ­னம் வகுத்­துள்ள 75% தடுப்­பூசி இலக்­கைக் காட்­டி­லும் ஆசி­யா­னில் குறிப்­பி­டத்­தக்க அளவு குறை­வா­கவே தடுப்­பூசி போடப்­ப­டு­வ­தாக அந்த ஆய்வு அறிக்கை கூறு­கிறது.

எடுத்­துக்­காட்­டாக, சிங்­கப்­பூ­ரில் சளிக்­காய்ச்­ச­லுக்கு 14 விழுக்­காட்­டி­னரே தடுப்­பூசி போட்­டுக்­கொள்­கின்­ற­னர். மாறாக, இவ்­வி­கி­தம் பிரிட்­ட­னில் 75 விழுக்­கா­டா­க­வும் தென்­கொ­ரி­யா­வில் 83 விழுக்­காடா­க­வும் உள்­ளது.

மேற்கு பசி­பிக் மருந்­தி­யல் மன்­றத்­தின் ஆத­ர­வு­டன் ஐரோப்­பிய ஒன்­றி­யம் - ஆசி­யான் வர்த்­தக மன்­றம், கணக்­கி­யல் நிறு­வ­ன­மான கேபி­எம்ஜி, சனோஃபி மருந்து நிறு­வ­னம் ஆகி­யவை இணைந்து இந்த ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்­டுள்­ளன.

"வாழ்­நாள் முழு­மைக்­கு­மான தடுப்­பூ­சித் திட்­டத்தை நடை­முறைப் ­ப­டுத்­து­வ­தற்­கான செலவு அதி­கம்­தான் என்­றா­லும் அதற்­கான மாற்று நட­வ­டிக்­கை­கள் அதை­வி­டச் செலவு­மிக்­கவை," என்­றார் மேற்கு பசிபிக் மருந்­தி­யல் மன்­றத்­தின் தலை­வர் ஜான் ஜாக்­சன்.

வாழ்­நாள் முழு­மைக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தன் முக்­கியத்­து­வத்தை உணர்ந்து, அதற்­கென வளங்­களை ஒதுக்­கு­தல், தடுப்­பூசி முனை­ய வசதிகளை மேம்­ப­டுத்­தல், தடுப்­பூ­சிச் செயல்­தி­றன், பாது­காப்பு குறித்த விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­தல் உள்­ளிட்ட பல பரிந்­து­ரை­களை அந்த ஆய்­வ­றிக்கை முன்­வைத்­துள்­ளது.