31,000க்கும் மேற்பட்ட சுயபரிசோதனைக் கருவிகள் விநியோகம்

31,000க்கும் மேற்பட்ட சுயபரிசோதனைக் கருவிகள் விநியோகம்

1 mins read
0172998b-6746-41ac-b38e-0af423e8eada
-
Google News Preferred Icon

புக்கிட் மேரா, ரெட்ஹில் வட்டாரங்களில் நூற்றுக்கும் மேலான வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு 31,000க்கும் மேற்பட்ட ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டன. அவ்விரு வட்டாரங்களிலும் உள்ள பல்வேறு வசிப்போர் குழு மையங்கள் மூலமாக இரு சுயபரிசோதனைக் கருவிகள் அடங்கிய தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன. அப்பகுதிகளில் கொவிட்-19 தொற்றுக் குழுமங்கள் உருவானதை அடுத்து, தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் குடியிருப்பாளர்களுக்குச் சுயபரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்