சேஃப்எண்ட்ரி நுழைவுச் சாதனம் மூலம் வருகைப் பதிவு

சேஃப்எண்ட்ரி நுழைவுச் சாதனம் மூலம் வருகைப் பதிவு

1 mins read
92d72a62-0e48-4e68-9d01-26198c5f6ed9
-

பேரங்காடிகள், கடைத்தொகுதிகள் போன்ற அதிகமானோரை ஈர்க்கும் இடங்களுக்குச் செல்லும் வருகையாளர்கள் அந்த இடங்களின் வாயில்களில் வைக்கப்பட்டிருக்கும் சேஃப்எண்ட்ரி நுழைவுச் சாதனம் மூலம் தங்கள் வருகையைத் தெரிவிக்கும் முறை சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் தடத்தைத் துல்லியமாக அறிய முடியும். நேற்று முன்தினம் போன விஸ்தாவில் உள்ள 'தி ஸ்டார் மால்' கடைத்தொகுதியின் நான்கு நுழைவாயில்களிலும் இந்தச் சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு செல்லும் வருகையாளர்கள் தங்கள் வருகையை அந்தச் சாதனத்தில் பதிந்துகொண்டு பின்னர் உள்ளே சென்றனர். அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்க அலுவலகம் இந்தச் சாதனங்களை கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கத் தொடங்கியது. அந்த வகையில் 'தி ஸ்டார் மால்' கடைத்தொகுதிக்கும் அவை வழங்கப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்