தடுப்பூசி பெற்ற புக்கிட் மேரா வியூ வாசிகள் வாகனப் பயிற்சிக்கு அனுமதி
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள புக்கிட் மேரா வியூ வாசிகள் இப்போது புக்கிட் பாத்தோக் வாகனமோட்டும் பயிற்சி நிலையத்திற்குள் (பிபிடிசி) நுழைய நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு வாகன மோட்டும் பயிற்சிகளிலும் வாகனமோட்டும் வகுப்புகளிலும் கலந்துகொள்ளலாம்.
புக்கிட் மேரா வட்டாரத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்ததால், அங்கு வசிக்கும் தனது மாணவர்கள் புக்கிட் பாத்தோக் வாகனமோட்டும் பயிற்சி நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என்று பிபிடிசி கடந்த வெள்ளிக்கிழமை தனது இணையப் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
நேற்று முன்தினம் தனது அறிவிப்பில் திருத்தம் செய்த பிபிடிசி, எல்லா வாடிக்கையாளர்களையும், அவர்கள் எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்தது. தனது முன்னைய அறிவிப்பின்படி, பயிற்சி வகுப்புகளை ரத்து செய்த மாணவர்களின் கட்டணங்கள் அவர்களின் பிபிடிசி கணக்குகளில் திருப்பி செலுத்தப்படும் என்று அந்நிலையம் விவரித்தது.
புக்கிட் மேரா வியூவில் கடந்த இரண்டு நாட்களில் கிருமித்தொற்று கட்டுக்குள் வந்திருப்பதைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிபிடிசி, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை நிலையத் தின் வாசலில் காண்பிக்க வேண்டும் என்று கூறியது.
கிளமெண்டி மரணம்: சகோதரரின் குற்றச்சாட்டு கொலையாக மாற்றம்
வேறு இருவருடன் சேர்ந்து தனது சகோதரியைக் காயப் படுத்தியதால் அவரது மரணத்துக்குக் காரணமான ஹுவாங் போக்கானின் (இடது படம்) முன்னைய குற்றச்சாட்டு இப்போது கொலைக் குற்றச்சாட்டாக மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக ஹுவாங் மீது வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 29 வயதாகும் ஹுவாங்குடன் 41 வயது சீ மெய் வான், 62 வயது லிம் பெங் தியோங் (வலது படம்) ஆகியோரின் முன்னைய குற்றச்சாட்டுகளும் கொலைக் குற்றச்சாட்டாக மாற்றப்பட்டுள்ளன.
அந்த மூவரும் ஹுவாங்கின் சகோதரியான ஹுவாங் பவ்யிங்கை, கடந்த மாதம் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு புளோக் 602, கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 1 எனும் முகவரியில் தாக்கி கடுமையான காயங்களை விளைவித் தனர். குமாரி ஹுவாங்குக்கு ஏற்படுத்தப்பட்ட காயங்கள் பற்றியும் அவரைத் தாக்க எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட் டன என்றும் கொலைக் குற்றச்சாட்டு ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. முன்னைய குற்றச்சாட்டில் அந்த மூவரும் மரக்கழியால் குமாரி ஹுவாங்கைத் தாக்கினர் என்று தெரிவிக்கப்பட்டது.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் அல்லது பிரம்படி யுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். சீ பெண்ணாக இருப்பதாலும் லிம் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருப்ப தாலும் அவர்கள் இருவருக்கும் பிரம்படி கொடுக்கப்படாது.
பாலர் பள்ளி ஆசிரியர்களாக அதிகமான ஆண்கள் தேவைப்படுகின்றனர்
சிங்கப்பூரில் பாலர் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஆண்களின் எண்ணிக்கை 2016ல் 114 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டில் 160 ஆக உயர்ந்தது. அதிகமான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பாலர் பள்ளிகளில் முழு நேரமும் இருக்க வேண்டும் என்று விரும்புவதால், இன்னும் அதிகமான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்று ஆரம்பகால பாலர் பருவ மேம்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
"இந்தத் துறையில் இன்னும் அதிகமான ஆண்கள் ஆசிரியர்களாக சேர்வதை நாங்கள் வரவேற்கிறோம். பெண் ஆசிரியர்களுடன் ஒப்புநோக்க, ஆண் ஆசிரியர்களின் விகிதம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு என்றாலும், 2016லிருந்து 2020 வரை ஆண் ஆசிரியர்களின் விகிதம் 35% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை 22,000 பேர் பாலர் பருவக் கல்வியாளர்களாகப் பணியாற்று கின்றனர். இது 2016ல் இருந்த 16,000 என்ற எண்ணிக்கை யுடன் ஒப்பிடுகையில் 38% அதிகரிப்பு," என்றும் வாரியம் விளக்கியது.
தற்பொழுது முழுநேர பாலர் பள்ளிகளில் உள்ள 190,000 இடங்களை வரும் 2023ஆம் ஆண்டுக்குள் 200,000 இடங் களுக்கு அதிகரிக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது. அதனால்தான் அதிகமான பாலர் பள்ளி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்றும் வாரியம் கூறியது.

