வெளிநாட்டு ஊழியர்களுக்கு நாங்கள் என்றுமே பக்கபலம்: தொடர்பு, தகவல் அமைச்சு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நாங்கள் என்றுமே பக்கபலம்: தொடர்பு, தகவல் அமைச்சு

2 mins read
4518c422-8bbc-4bdd-9462-f1bc731a3eb8
போட்டியாளர்களின் காணொளிகள். -

கொவிட்-19 கிருமிப்பரவல் காலக்கட்டத்தில் ஊழியர்களுக்கு தொடர்பு, தகவல் சாதனங்களின் வழி ஊக்கமும் ஆதரவும் கொடுக்கும் முயற்சிகளில் 'திறமையைக் காட்டு மாப்பி' எனும் காணொளி போட்டி நடைபெற்று வருகிறது. இதனிடையே, வெளிநாட்டு ஊழியர்களின் நலனை தான் என்றும் ஆதரிப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்பு, தகவல் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டிக்காக ஜூன் மாதம் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 600 பேர் அனுப்பியுள்ள காணொளிகளில் ஆடல், பாடல், இசைக்கருவி வாசித்தல், ஓவியக்கலை, சிலம்பாட்டம், பல குரலில் பேசும் திறன், சமையற்கலை என பலதரப்பட்ட படைப்புகள் காண்பிக்கப்பட்டன. சிறந்த 10 போட்டியாளர்களுக்குப் பரிசு வழங்கப்படும். முதல் பரிசு 1,000 வெள்ளி. @sg4mw என்ற டிக்டோக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன அந்த காணொளிகள். அடுத்த நான்கைந்து நாட்களில் ஆக அதிக 'லைக்குகள்' பெறும் காணொளிக்கு அந்த 1,000 வெள்ளி கொடுக்கப்படும்.

"கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு தொடர்ச்சியான, ஒட்டுமொத்தமான முயற்சி தேவைப்படுகிறது. நாம் அனைவரும் எல்லோரையும் கவனிக்கவும் வேண்டியுள்ளது. இது எங்களது வெளிநாட்டு ஊழியர் சமூகத்தையும் உள்ளடக்கும். அவர்களது சுகாதாரமும் நலமும் பராமரிக்கப்படவேண்டும் என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது," என்று அமைச்சின் பொது தொடர்பு பிரிவின் இயக்குநர் ( திட்டம் மற்றும் தயாரிப்புத் துறை) திருவாட்டி சோஃபி ஹரியாத்தி தெரிவித்தார்.

"கோவ்.எஸ்ஜி மற்றும் கோஸ்மிக் குழுவின் இணை தயாரிப்புகளான இவை, தற்போதைய கிருமி காலக்கட்டத்திலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கியமான தகவல்களைச் சேர்ப்பதை உறுதி செய்யும் முயற்சியில் அங்கம் வகிக்கின்றன. இதன் மூலம் இவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஊக்கமும் உறுதியும் அளித்து அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களின் ஒன்று. .

வெளிநாட்டு ஊழியர் நிலையம் எனப்படும் மைகிரண்ட் வர்க்கர்ஸ் செண்டர், ஹெல்த்ஸர்வ், ஜேடிசி இணைப்புகள் ஆகியவற்றுடன் அணுக்கமாக இணைந்து நாங்கள் பணியாற்றியுள்ளோம்," என்று அவர் கூறினார்.

இணைப்பு: https://www.youtube.com/channel/UCKFgGW0blMolcteh4YitpBw