தடுப்பூசி போட்டுக்கொண்டோருடன் தேசிய தின அணிவகுப்பு 2021

தடுப்பூசி போட்டுக்கொண்டோருடன் தேசிய தின அணிவகுப்பு 2021

2 mins read
517de4e8-e489-464b-8b2a-9c227c2888f6
2019ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில், மரினா பே மிதக்கும் மேடையில் 25,000 பார்வையாளர் சூழ, தேசிய தின அணிவகுப்பு நடைபெற்றது. இம்முறை எண்ணிக்கை குறைக்கப்படும்.கோப்புப்படம் -

தேசிய தின அணி­வ­குப்பு இவ்­வாண்டு மரினா பே மிதக்­கும் மேடை­யில் நடை­பெ­றும். ஆனால் பார்­வை­யா­ளர்­ எண்­ணிக்கை குறை­வாக இருக்­கும். அத்­து­டன் அனை­வ­ரும் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும்.

அணி­வ­குப்­பில் பங்­கேற்­ப­வர்­களும் அணி­வ­குப்­பைக் காண வரும் பார்­வை­யா­ளர்­களும் தங்­களின் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்டு முடித்­தி­ருப்­பது கொவிட்-19 முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாகும் என்­றார் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென்.

இந்­நி­லை­யில் அணி­வ­குப்­பில் பங்­கேற்­கும் கலை­ஞர்­கள், ஒவ்­வோர் ஒத்­தி­கைக்கு முன்­ன­ரும் 'ஆண்­டி­ஜன்' விரைவு பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள வேண்­டும். ஒத்­திகை­கள் சிறு சிறு குழுக்­களில் நடந்­தே­றி­னா­லும் இக்­கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்கை பொருந்­தும் என்று கூறப்­பட்­டது.

அதே வேளை நிகழ்ச்­சிக்கு முந்­திய கொவிட்-19 பரி­சோ­த­னை­யைப் பார்­வை­யா­ளர்­கள் செய்­து­கொள்ள வேண்­டும். மண்­டாய் ஹில் ராணுவ முகா­மில் இருந்­த­வாறு டாக்­டர் இங் இத்­த­க­வல்­க­ளைத் தெரி­வித்­தி­ருந்­தார்.

சமூ­கத்­தில் தொடர்புகள் கண்­ட­றி­யப்­ப­டாத கொவிட்-19 சம்­ப­வங்­கள் இன்­ன­மும் பதி­வாகி வரும் நிலை­யில் தேசிய தின அணி­வ­குப்பு ஏன் கலை­ஞர்­கள் பங்­கேற்­பு­ட­னும் பார்­வை­யா­ளர்­க­ளு­ட­னும் நேரடி நிகழ்­வாக நடை­பெ­று­கிறது என்று நேர்­கா­ண­லின்­போது டாக்­டர் இங்­கி­டம் கேட்­கப்­பட்­டது.

"கொவிட்-19 இங்கு வியாபித்து­விட்ட ஒரு நோயா­கி­விட்­டது. இந்­தக் கிரு­மித்­தொற்­றுச் சூழ­லில் வாழப் பழ­கிக்­கொள்­வ­தும் இதற்கு ஒரு கார­ணம். அத்­து­டன் ஆகஸ்ட் மாதத்­திற்­குள் மக்­கள்­தொ­கை­யின் மூன்­றில் இரு பங்­கி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருப்­பர் என்று நம்­பு­கி­றோம்," என்­றார் அவர்.

"அணி­வ­குப்­பைப் பாது­காப்­பான முறை­யில் நடத்த முடி­யும் என்று நாங்­கள் நினைக்­கி­றோம். அத்­துடன் கிரு­மித்­தொற்­று­டன் வாழப் பழ­கிக்­கொள்­வ­தற்கு இது ஏற்­ற­தோர் நிகழ்­வா­கும். அதே சம­யம் இதைச் சமா­ளித்­துப் புது வழக்­க­நி­லைக்­குத் திரும்­ப­லாம்," என்­றார்.

வழக்­க­மாக தேசிய தின அணி­வ­குப்­புக்­குக் கூடும் 25,000 பேருக்­குப் பதில் எண்­ணிக்கை மாறும் என்­பதே புது வழக்­க­நி­லைக்­குத் திரும்­பு­வ­தன் ஓர் எடுத்­துக்­காட்டு என்­றார்.

பார்­வை­யா­ளர் எண்­ணிக்கை, அணி­வ­குப்பு தொடர்­பான மேல்­வி­வ­ரங்­கள் ஆகி­ய­வற்றை அணி­வகுப்­புக்­கான ஏற்­பாட்­டுக் குழு இன்­னும் சில நாட்­களில் தெரி­விக்­கும் என்­றார் டாக்­டர் இங்.

அணி­வ­குப்பு, கலை­நி­கழ்ச்சி ஆகி­ய­வற்­று­டன் குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் நட­வ­டிக்­கை­களும் ஏற்­பாடு செய்­யப்­படும் என்­றார்.

"மேலும் பரந்­த­தொரு கண்­ணோட்­டத்தை தேசிய தின அணி­வ­குப்பு நிகழ்ச்சி நமக்கு அளிக்­கும் என்று நம்­பு­கி­றேன். கடு­மை­யான கால­கட்­ட­மாக இது இருந்து வந்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரர்­க­ளின் உத­வி­யு­டன் நம்­மால் இதைச் சாதிக்க முடி­யும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் டாக்­டர் இங்.