நண்பர்களுடன் டாக்சி ஓட்டுநரை குறிவைத்துத் தாக்கிய பதின்மவயதுப் பெண்

நண்பர்களுடன் டாக்சி ஓட்டுநரை குறிவைத்துத் தாக்கிய பதின்மவயதுப் பெண்

1 mins read
8937436b-a1c8-449f-b044-6d62bc280b43
-

மூன்று ஆண் நண்­பர்­க­ளு­டன் டாக்சி ஓட்­டு­நர் ஒரு­வரை, 16 வயது பெண் தாக்­கி­ய­து­டன் அவ­ரி­ட­மி­ருந்த பணத்­தை­யும் பறித்­தார்.

அத்­து­டன் அந்த நண்­பர்­களில் இரு­வ­ரு­டன் காப்­பிக் கடை ஒன்­றுக்­குள் புகுந்து $600 மதிப்­பு­டைய சிக­ரெட்­டு­க­ளை­யும் திரு­டி­னார். 18 வய­துக்­குக் கீழ் உள்ள நிலை­யில் பெண்­ணின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. 12 வய­துக்­கும் 15 வய­துக்­கும் இடைப்­பட்ட அந்த மூன்று ஆண் நண்­பர்­க­ளைச் சென்ற ஆண்டு அக்­டோ­பர் 8ஆம் தேதி­யன்று சந்­தித்­தார் அந்தப் பெண்.

டாக்சியில் சவாரி செய்த பிறகு கட்­ட­ணம் செலுத்­தா­மல் ஓடி­வி­ட­லாம் என்று நண்­பர்­கள் திட்­ட­மிட்­ட­னர். ஓட்­டு­நர் துரத்­தி­னால் அவ­ரைத் தாக்­க­லாம் என்­றும் முடி­வெ­டுத்­த­னர்.

முதல் முறை தங்­கள் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தி­ய­போது ஓட்­டு­நர் அவர்­க­ளைத் துரத்­த­வில்லை. அத­னால் இரண்­டா­வது ஓட்­டு­ந­ரான 63 வயது ஆட­வரை வேண்டு­மென்றே வம்­பி­ழுத்து அவ­ரைத் தாக்­கி­ய­து­டன் அவ­ரி­ட­மி­ருந்து $256ஐ அப­க­ரித்­த­னர். முகக்­காயங்­க­ளு­டன் பின்­னர் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட அந்த ஓட்­டு­ந­ருக்கு மறதி நோயும் ஏற்­பட்­டி­ருந்­தது.

மூன்று நாட்­கள் கழித்து சுவா சூ காங் காப்­பிக் கடை ஒன்­றி­னுள் அத்­து­மீ­றிப் புகுந்து சிக­ரெட்­டு­க­ளைக் கள­வா­டி­னர்.

திருட்டு தொடர்­பான மேலும் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள், தனக்கு ஒரு­வர் பாலியல் வன்கொடுமை இழைத்த­தாக போலிஸ் அதி­கா­ரி­யி­டம் பொய்த் தக­வல் அளித்­தல் ஆகி­யவை தண்­டனை விதிப்­பின்­போது கருத்­தில் கொள்­ளப்­படும்.

நேற்று குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட அந்தப் பெண், மீண்­டும் இம்­மா­தம் 7ஆம் தேதி­யன்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார்.