ஆகஸ்ட் 28லிருந்து செயல்­ப­டத் தொடங்­கும்

ஆகஸ்ட் 28லிருந்து செயல்­ப­டத் தொடங்­கும்

2 mins read
f64b4f2b-3e5a-4ee7-8c50-4215cfb68eff
தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யில் இருக்­கும் பிரைட்­ஹில் எம்­ஆர்டி நிலை­யத்­துக்கு ரயி­லில் செல்­லும் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் (இடது). படம்: சாவ்­பாவ் -

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யின் இரண்­டாம் கட்ட நிலை­யங்­கள் அடுத்த மாதம் 28ஆம் தேதி­யி­லி­ருந்து செயல்­ப­டத் தொடங்­கும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் அறி­வித்­துள்­ளார்.

ஸ்பி­ரிங்­லீஃப், லென்­டோர், மேஃபிள­வர், பிரைட்­ஹில், அப்­பர் தாம்­சன், கெல்­டி­கோட் ஆகிய நிலை­யங்­களை இந்­தப் புதிய பாதை இணைக்­கிறது.

"நமது தொழில்­நுட்­பர்­கள், பொறி­யா­ளர்­கள், இதர ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரின் கடு­மை­யான உழைப்பு, தியாகங்கள் இன்றி இந்­தப் பாதை தயா­ராகி இருக்­காது," என்­றார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன்.

இந்த ரயில் பாதை­யின் திறப்பு தாம­த­ம­டைந்­த­தற்கு கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யும் ஒரு கார­ண­மாக இருந்­தது.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை 2ல் இரண்டு எம்­ஆர்டி

சந்­திப்­பு­கள் உள்ளன.

கெடில்­கோட் நிலை­யம் வட்ட ரயில் பாதை­யு­ட­னும் பிரைட்ஹில் நிலை­யம் எதிர்­கால குறுக்­குத் தீவு நிலை­யத்­து­ட­னும் இணைக்­கப்­படும்.

ரயில் கட்­ட­மைப்­பின் மீள்­

தி­றனை தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை மேம்­ப­டுத்­தும் என்று

திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

இன்­னும் சில ஆண்­டு­களில் இப்­பாதை முழு­மை­யா­கச் செயல்­

ப­டும்­போது அது ஏற்­கெ­னவே செயல்­பாட்­டில் இருக்­கும் ஐந்து ரயில் பாதை­க­ளு­ட­னும் திறக்­கப்­பட இருக்­கும் குறுக்­குத் தீவு ரயில் பாதை­யு­ட­னும் இணைக்­கப்­படும்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை முழு­மை­யடைந்ததும் 240,000க்கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் தங்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெறும் பத்து நிமிட நடை­யில் நிலை­யத்தை அடைந்­து­வி­ட­லாம் என்று திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை 1, தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை 2 ஆகி­ய­வற்­றால் ஏறத்­தாழ 100,000 குடும்­பங்­கள் பல­ன் அடை­யும் என்­றார் அவர்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யில் முதற்­கட்ட நிலை­யங்­கள் கடந்த ஜன­வரி மாதம் திறக்­கப்­பட்­டன.

அப்­பா­தை­யில் உட்­லண்ட்ஸ் நார்த்­தி­லி­ருந்து உட்லண்ட்ஸ் சவுத் வரை மூன்று நிலை­யங்­கள் உள்­ளன.

புதிய கெல்டிகோட் நிலை­யம் சிங்­கப்­பூர் பார்வைக் குறை­பாடு உள்­ளோர் சங்­கம், லைட்­ஹ­வுஸ் பள்ளி ஆகி­ய­வற்­றுக்கு மிக அரு­கில் இருப்­ப­தாக கெல்டி­கோட் நிலை­யத்­தில் பேசிய அமைச்­சர்

ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

"பார்வைக் குறை­பாடு உள்ள

பய­ணி­க­ளுக்­குக் கூடு­தல் உதவி வழங்­கும் வகை­யில் தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை நிலை­யங்­களில் உள்ள மின்­தூக்கி பொத்­தான்­கள் வெவ்­வேறு வண்­ணங்­களில் இருக்­கும்," என்­றார் திரு ஈஸ்­வ­ரன்.

படிக்­கட்­டு­க­ளின் கைப்­பி­டி­களில் விளக்­கு­கள் பொருத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நட­மாட சிர­மப்­படும் மூத்­தோ­ருக்­கும் பய­ணி­க­ளுக்­கும் நிலை­யத்­தில் உள்ள தள­மே­டை­களில் சிறப்பு இருக்­கை­க­ளுக்­கும் கைப்­பி­டி­க­ளுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­

பட்­டுள்­ளன.

43 கிலோ­மீட்­டர் நீள­முள்ள தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யில் 32 நிலை­யங்­கள் இருக்­கும்.

துவக்­கத்­தில் அப்­பா­தை­யில் சரா­ச­ரி­யாக 500,000 பேர் பய­ணம் செய்­வர் என்­றும் படிப்­ப­டி­யாக இந்த எண்­ணிக்கை ஒரு மில்­லி­ய­னாக உய­ரும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.