ரவி மேனன்: சிங்­கப்­பூ­ரின் நிதித் துறை ஏறத்­தாழ 6% ஏற்­றம்

ரவி மேனன்: சிங்­கப்­பூ­ரின் நிதித் துறை ஏறத்­தாழ 6% ஏற்­றம்

1 mins read
c8ed9345-9aff-4c7c-88cb-b80a47bd662d
-

இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் சிங்­கப்­பூ­ரின் நிதித் துறை ஏறத்­தாழ ஆறு விழுக்­காடு ஏற்­றம் கண்­ட­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ரவி மேனன் நேற்று தெரி­வித்­தார்.

இவ்­வாண்­டின் பிற்­ப­கு­தி­யில் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் மீட்சி மேம்­படும் என்று ஆணை­யம் வெளி­யிட்ட வரு­டாந்­திர அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் கடந்த ஆண்டு 5.1 விழுக்­காடு வளர்ச்சி கண்­ட­தாக ஆணை­யம் கூறி­யது. 2019ஆம் ஆண்­டை­விட கடந்த ஆண்டு கொவிட்-19 சூழ­லுக்கு முன்பு பொரு­ளி­ய­ல் வளர்ச்சி வேக­மாக இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. வங்கி, காப்­பு­றுதி, நிதி நிர்­வாகம், கட்­ட­ணச் சேவை­கள் ஆகிய துறை­கள் நல்ல வளர்ச்சி கண்­டன.

"இந்த ஆண்­டி­லும் நிதித் துறை தொடர்ந்து வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் என நம்­பு­கி­றோம்," என்­றார் திரு மேனன்.

கடந்த ஆண்­டில் நிதிச் சேவை­கள், ஃபிண்டெக் துறை­கள் 2,500 வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கின.­ தொழில்­நுட்­பம், நிதி நிர்­வா­கம், வங்­கி­கள், காப்­பு­றுதி போன்ற துறை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் 6,500 வேலை வாய்ப்­பு­களை நிதி நிறு­வ­னங்­கள் உரு­வாக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. உள்­ளூர் வங்கி ­க­ளுக்­கான ஈவுத்­தொகை கட்­டுப்­பா­டு­களை நீட்­டிப்­பது தேவை

­யா­னது­தானா என மதிப்­பீடு செய்ய ஆணை­யம் சோதனை நடத்தி வரு­வ­தாக திரு மேனன் கூறி­னார்.