சினோவேக் போட்டிருந்தால் விலக்கு அளிக்கப்படாது

3 mins read
22d76480-27c1-4f1c-aca1-8aa944f7cee9
-

நிகழ்ச்சிக்கு முந்திய கொவிட்-19 பரிசோதனை

சினோ­வேக் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு நிகழ்ச்­சிக்கு முந்­திய கொரோனா பரி­சோ­த­னை­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­ப­டாது என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரின் தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தில் இடம்­பெ­றாத கொவிட்-19 தடுப்­பூ­சி­கள், கொரோனா தொற்­றி­லி­ருந்து, குறிப்­பாக இப்­போது உல­விக்­கொண்­டி­ருக்­கும் உரு­மா­றிய 'டெல்டா' கிரு­மி­யி­ட­மி­ருந்து பாது­காப்­ப­தில் எத்­த­கைய செயல்­தி­ற­னைக் கொண்­டுள்­ளன என்­ப­தற்கு போதிய சான்­று­கள் இல்­லா­மல் இருக்­க­லாம் என்று அமைச்சு கூறி­யுள்­ளது.

அவ்­வ­கை­யில், சினோ­வேக் தடுப்­பூசி சிங்­கப்­பூ­ரின் தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தில் இடம்­பெ­ற­வில்லை.

"ஆகை­யால், பொது­மக்­க­ளின் நலன் கருதி, நமது கொவிட்-19 தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தில் இடம்­பெ­றாத தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள் நிகழ்ச்­சிக்கு முந்­திய கொரோனா பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள வேண்­டும்," என்று அமைச்சு கூறி­யி­ருக்­கிறது.

இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டோர்க்கு, நேரடி நிகழ்ச்­சி­கள், கூட்­டங்­கள், மாநாடு­கள், கண்­காட்­சி­கள், திரு­மண விழாக்­கள் போன்ற நிகழ்ச்­சி­களுக்கு முந்­திய பரி­சோ­த­னை­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­படும் என்று அர­சாங்­கம் முன்­ன­தாக அறி­வித்­தி­ருந்­தது.

அர­சாங்­கத்­தி­டம் இருப்­பில் இருக்­கும் சினோ­வேக் தடுப்­பூ­சி­களைப் பெற 24 தனி­யார் மருந்­த­கங்­க­ளுக்­குச் சென்ற மாதம் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

தமது மருந்­த­கத்­தில் இது­வரை 400க்கும் மேற்­பட்­டோர் சினோ­வேக் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தா­கக் கூறி­னார் ரோஃபி மருந்­த­கத்­தைச் சேர்ந்த மருத்­து­வர் லியோங் ஹோ நாம்.

அவர்­களில் பெரும்­பான்­மை­யோர் சீன நாட்­ட­வர்­கள் என்­றும் 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூ­சி­க­ளைத் தம்­மால் தாங்க இயலாது என்று கரு­திய முதி­ய­வர்­கள் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஒப்­பு­நோக்க, புதிய தொழில்­நுட்­பத்­தில் உரு­வாக்­கப்­பட்­டது என்­பதால் 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூசி குறித்து சிலர் தங்­க­ளது கவலையை வெளிப்­ப­டுத்­தி­னர் என்று சொன்­னார் ஐகான் புற்­று­நோய் மையத்­தின் தலைமை நிர்­வாகி செரீனா வீ.

மாறாக, சளிக்­காய்ச்­சல், இளம்­பிள்­ளை­வா­தம் போன்ற நோய்­களுக்­கான தடுப்­பூ­சி­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் அதே தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தியே சினோ­வேக் தடுப்­பூசி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

ஐகான் புற்­று­நோய் மையத்­தில் ஜூன் 21ஆம் தேதி­யில் இருந்து நாளொன்­றுக்கு 25 முதல் 30 சினோ­வேக் தடுப்­பூ­சி­கள் போடப்­ப­டு­வ­தாக திரு­வாட்டி செரீனா குறிப்­பிட்­டார்.

சினோ­வேக் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர்க்கு நுழை­வுக் கட்­டுப்­பா­டு­களை சீன அர­சாங்­கம் எளி­மை­யாக்­கும் என்று சிலர் கரு­து­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் சினோ­வேக் தடுப்­பூசி இன்­னும் பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை. பெருந்­தொற்­றுச் சிறப்பு அனு­மதி வழி­மு­றை­யின்­கீழ் சுகா­தார அறி­வி­யல் ஆணை­ய­மும் அதற்கு இன்­னும் அனு­மதி வழங்­க­வில்லை.

சிறப்பு அனு­மதி வழி­மு­றைக் கட்­ட­மைப்­பின்­கீழ் மட்­டுமே அந்தத் ­தடுப்­பூசி இங்கு போடப்­ப­டு­கிறது.

இந்­தக் கட்­ட­மைப்­பின்­கீழ் வரும் தடுப்­பூ­சி­களை தடுப்­பூ­சிக் காய நிதி­யு­த­வித் திட்­டம் உள்­ள­டக்­க­வில்லை. தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தில் இடம்­பெற்­றுள்ள கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­ட­பின் கடு­மை­யான பக்க விளைவு­களால் பாதிக்­கப்­ப­டு­வோர்க்கு அத்­திட்­டம் ஆத­ரவு வழங்­கு­கிறது.

சிறப்பு அனு­மதி வழி­மு­றைக் கட்­ட­மைப்­பின்­கீழ் வரும் தடுப்­பூசி­க­ளைப் போட்­டுக்­கொள்­வோ­ரி­டம், அவர்­கள் தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரைப் போலக் கரு­தப்­படா­மல் போக­லாம் என்­ப­தை மருத்துவர்கள் தெரி­விக்க வேண்­டும் என்று அமைச்சு அறி­வு­றுத்தி இருக்­கிறது.

இது, சிறப்பு அனு­மதி வழி­முறைக் கட்­ட­மைப்­பின்­கீழ் வரும் சினோ­வேக் போன்ற தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தன் சாதக பாத­கங்­களை நோயா­ளி­கள் கவ­னத்­தில் கொள்ள அனு­ம­திக்­கும் என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.