விவோசிட்டி, ஹார்பர்ஃபிரன்ட் சென்டர் ஊழியர்களுக்குக் கட்டாயப் பரிசோதனை

விவோசிட்டி, ஹார்பர்ஃபிரன்ட் சென்டர் ஊழியர்களுக்குக் கட்டாயப் பரிசோதனை

2 mins read
b64d8afb-04b5-49e9-9ca9-38fe9b59b48a
-

சென்ற மாதம் 13ஆம் தேதி­யில் இருந்து 28ஆம் தேதி­வரை விவோ­சிட்டி, ஹார்­பர்­ஃபி­ரன்ட் சென்­டர் கடைத்­தொ­கு­தி­களில் பணி­பு­ரிந்­தோர்க்­கான கட்­டாய கொவிட்-19 பரி­சோ­தனை நேற்று தொடங்­கி­யது.

அந்த நாள்­களில் பணி­யாற்­றிய துப்­பு­ர­வா­ளர்­கள், பாது­கா­வல் அதி­கா­ரி­கள், ஒப்­பந்­த­தா­ரர்­கள், பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­கள் ஆகி­யோ­ரும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று விவோ­சிட்டி நிர்­வா­கத்­தின் அறி­விப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­விரு கடைத்­தொ­கு­தி­க­ளி­லும் செயல்­பா­டு­கள் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று அவற்­றின் உரி­மை­யா­ள­ரான மேப்­பில்ட்ரீ நிறு­வ­னம் தெரி­வித்­தது.

"பணி­யா­ளர்­கள், குத்­த­கை­தாரர்­கள், கடைக்­கா­ரர்­கள் ஆகிய அனை­வ­ரின் பாது­காப்­பை­யும் நல்­வாழ்­வை­யும் பாது­காத்­திட உத­வும் வகை­யில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்­கை­யாக கொரோனா பரி­சோதனை இடம்­பெ­று­கிறது," என்று அதன் பேச்­சா­ளர் கூறி­னார்.

குறிப்­பாக அறி­வு­றுத்­தப்­பட்­டால் ஒழிய, கடைக்­கா­ரர்­கள் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளத் தேவை­யில்லை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

விவோ­சிட்­டி­யின் இரண்­டாம் தளத்­தில் உள்ள கார் நிறுத்­தப் பூங்­கா­வில் பரி­சோ­தனை இடம்­பெறு­கிறது.

பரி­சோ­தனை குறித்­தும் தமக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள நேரம் குறித்­தும் குறுஞ்­செய்தி வந்­த­தாக அந்­தக் கடைத்­தொ­கு­தி­க­ளின் பணி­யா­ளர்­கள் கூறி­னர்.

பரி­சோ­தனை நட­வ­டிக்கை விரைந்து மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­க­வும் மொத்­தச் செயல்­மு­றைக்­கும் ஒரு­வர்க்கு 15 நிமி­டங்­க­ளுக்­கு­மேல் ஆக­வில்லை என்­றும் சொல்­லப்­பட்டது.

கொவிட்-19 நோயா­ளி­கள், அதனால் பாதிக்கப்பட்டிருந்தபோது சென்ற இடங்­களில் விவோ­சிட்­டி­யும் ஒன்று.

அத்­த­கைய ஒரு­வர் கடந்த மாதம் 18ஆம் தேதி மாலை 6 மணி­யில் இருந்து இரவு 7.50 மணி­வரை அக்­க­டைத்­தொ­கு­தி­யில் இருந்­த­தாகக் கூறப்­பட்­டது.

எச்­சில்/சளி மாதி­ரிப் பரி­சோ­தனை நாளை­யு­டன் நிறை­வு­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பரி­சோ­தனை செய்­து­கொண்­ட­பின் பணி­யா­ளர்­கள் வேலை­யைத் தொட­ர­லாம். பரி­சோ­தனை முடி­வு­கள் மூன்று நாள்­க­ளுக்­குள் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.