கடைத்தொகுதிகள், பேரங்காடிகளில் 300 மின்கழிவு சேகரிப்புத் தொட்டிகள்

கடைத்தொகுதிகள், பேரங்காடிகளில் 300 மின்கழிவு சேகரிப்புத் தொட்டிகள்

2 mins read
e9e700b6-81ee-4bf7-9b35-5ffa53046f5d
ராஃபிள்ஸ் பொலிவார்ட், மில்லெனியா வாக்கில் உள்ள ஹார்வி நார்மன் கடையில் வைக்கப்பட்டுள்ள மின்கழிவுச் சேகரிப்புத் தொட்டியில் மின்கழிவைப் போடும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர். படம்: திமத்தி டேவிட் -

கடைத்­தொ­கு­தி­கள், பேரங்­கா­டி­கள் போன்ற இடங்­களில் முந்­நூற்­றுக்­கும் அதி­க­மான மின்­க­ழிவு சேக­ரிப்­புத் தொட்­டி­களில் இன்று முதல் பய­னீட்­டா­ளர்­கள் தங்­க­ளது மின், மின்­ன­ணுக் கழி­வு­க­ளைப் போட்­டுச் செல்­ல­லாம்.

பொருள்­களை மறு­சு­ழற்சி செய்­வதை ஊக்­கு­விக்­கும் தேசிய திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இப்­பு­திய மின்­க­ழிவு நிர்வாகத் திட்­டத்தை அரசாங்கம் தொடங்கி இருக்கிறது.

ஆண்­டு­தோ­றும் ஏறக்­கு­றைய 20,000 டன் மின்­க­ழி­வு­க­ளைச் சேக­ரிக்க வேண்­டும் என்­பதே இலக்கு. குளிர்­ப­த­னப் பெட்­டி­கள் போன்ற பெரிய அள­வி­லான மின்­க­ரு­வி­கள், மடிக்­க­ணினி போன்ற தக­வல் தொழில்­நுட்­பச் சாத­னங்­கள், சிறிய அள­வி­லான மின்­வி­ளக்­கு, மின்­கலம் போன்­றவை அதிலடங்­கும்.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஏமி கோர், மில்­லெ­னியா வாக்­கில் அமைந்­துள்ள ஹார்வி நார்­மன் அறை­க­லன், மின்­ன­ணுக் கருவி விற்­ப­னைக் கடை­யில் நேற்று இத்­திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்.

சிங்­கப்­பூ­ரில் ஆண்­டுக்கு ஏறத்­தாழ 60,000 டன் மின்­க­ழி­வு­கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தாக டாக்­டர் கோர் குறிப்­பிட்­டார். இது, ஒவ்­வோர் ஆண்­டும் ஒரு­வர் கிட்­டத்­தட்ட 70 கைபே­சி­களை வீசி­யெ­றி­வ­தற்­குச் சமம்.

மின்­ன­ணுக் கரு­வி­கள் பயன்­பாடு அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் இந்த அளவு மேலும் கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"விலை­ம­திப்­பு­மிக்க பொருள்­களை மீட்­க­வும் அபா­ய­க­ர­மான பொருள்­கள் நம் உடல்­ந­லத்­தை­யும் சுற்­று­சூ­ழ­லை­யும் பாதிப்­ப­தைத் தடுக்­க­வும் மின்­க­ழி­வு­களை முறை­யா­கக் கையாள வேண்­டும். சிங்கப்­பூ­ரைக் கழி­வில்லா நாடாக மாற்ற மின்­க­ழி­வு­க­ளைக் குறைப்­ப­தும் மறு­சு­ழற்சி செய்­வ­தும் மிக முக்­கியம்," என்­றார் டாக்­டர் கோர்.

ஜூன் 4ஆம் தேதி அறி­மு­கப்­படுத்­தப்­பட்ட முன்­னோட்­டத் திட்­டத்­தின்­கீழ், நேற்று முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமைவரை அச்­சுப்­பொறி­கள், கைபே­சி­கள், மின்­விளக்கு­கள், கணி­னி­கள் உட்­பட 1,000 கிலோ­வுக்­கும் அதி­க­மான மின்­க­ழி­வு­கள் சேக­ரிக்­கப்­பட்­ட­தாக தேசிய சுற்றுப்­புற வாரி­யம் தெரி­வித்­தது.

அனைத்­து­லக கழிவு நிர்வாக நிறு­வ­ன­மான அல்பா குழு­மத்­தின் 'அல்பா மின்­க­ழிவு விவேக மறு­சுழற்சி' நிறு­வ­னம், 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிவரை இந்த மின்­க­ழி­வுச் சேக­ரிப்பு சேவை­களை மேற்கொள்ளும்.

பய­னீட்­டா­ளர்­கள் மின்­க­ழி­வு­களை மறு­சு­ழற்சி செய்­யும்­போது அல்பா நிறு­வ­னத்­தின் 'ஸ்டெப் அப்' கைபே­சிச் செய­லி­யின் மூலம் புள்ளி­களை ஈட்­ட­லாம். அத­னைப் பயன்­படுத்தி, வாடகை வாகன சேவை, உணவு விநி­யோ­கம், சைக்­கிள் பகிர்வு, அழ­குப் பொருள்­கள், சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த பொருள்­களை அவர்­கள் பெற முடி­யும்.

அந்­தச் செய­லி­யைக் கொண்டு, சேக­ரிப்­புப் பகு­தி­களில் உள்ள கியூ­ஆர் குறி­யீட்டை வருடி, தாங்­கள் மறு­சு­ழற்சி செய்­யும் மின்­க­ழி­வைப் பட­மாக எடுத்து, மதிப்­புப் புள்­ளி­களை ஈட்டலாம்.